குவாலிபயர் 1 : சி.எஸ்.கே அணியை எதிர்க்கவுள்ள டெல்லி அணியின் பிளேயிங் லெவன் இதோ – ஜெயிச்சிடுவாங்களோ ?

cskvsdc
cskvsdc

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் தற்போது பிளே ஆப் சுற்றில் விளையாட இருக்கின்றன. அதன்படி இன்று நடைபெற இருக்கும் முதல் குவாலிபயர் 1 போட்டியில் முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணியும், இரண்டாம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால் இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று தெரிகிறது.

அதே வேளையில் தோல்வியடையும் அணி மீண்டும் ஒரு வாய்ப்பு பெற்று குவாலிபயர் இரண்டாவது போட்டியில் விளையாடும். ஆனாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லவே இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்து ஆதிக்கத்தை செலுத்தி வரும் இரு அணிகளாக பார்க்கப்படும் டெல்லி மற்றும் சென்னை அணிகள் இப்போட்டியில் மோதுவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டெல்லி அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

dc

அதன்படி இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. பந்துவீச்சில் அந்த அணி மிகப் பெரிய பலத்துடன் உள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் நோர்க்யா, ரபாடா, அவேஷ் கான் என பக்கா பவுலர்கள் உள்ளனர். மேலும் சுழற்பந்தில் அக்சர் படேல், அஷ்வின் உள்ளனர்.

- Advertisement -

nortje

அதே போன்று பேட்டிங்கிலும் துவக்க வீரர்கள் சிறப்பாக ரன் குவிக்கும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் பட்டையை கிளப்பும் வீரர்கள் உள்ளனர். அவ்வளவு பலமாக இருக்கும் டெல்லி அணி சென்னை அணியை வீழ்த்தும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த போட்டிக்கான டெல்லி அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) ப்ரித்வி ஷா, 2) ஷிகார் தவான், 3) ரிஷப் பண்ட், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிப்பல் படேல், 6) ஹெட்மயர், 7) அக்சர் படேல், 8) அஷ்வின், 9) ரபாடா, 10) நோர்க்யா, 11) அவேஷ் கான்

Advertisement