சென்னை அணியை தொடர்ந்து டெல்லி அணியிலும் ஏற்பட்ட சோகம் – வெளியான அதிர்ச்சி தகவல்

Shaw

பல மாதங்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் நடத்தப்படுவது தற்போது உறுதியாகிவிட்டது. இதற்கான முழு அட்டவணையும் நேற்று அறிவிக்கப்பட்டுவிட்டது. திட்டமிட்டபடி ஐபிஎல் தொடரில் நடத்தியே தீருவேன் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவித்திருக்கிறார் பல பிரச்சினைகள் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் வந்து கொண்டு தான் இருக்கிறது. பாதுகாப்பாக அனைத்து வீரர்கள் பயிற்சியாளர்கள் என அனைவரையும் ஆகஸ்ட் மாதத்திற்குள் துபாய்க்கு கொண்டு வந்து சேர்த்தாகிவிட்டது.

Ashwin

அவர்கள் அனைவரையும் உயிர் பாதுகாப்பு வளையம், என்ற கடுமையான கொரோனா வைரஸ் விதிமுறைகள் அதிகம் நிறைந்த ஒரு பாதுகாப்பு சூழலில் வைத்திருக்கிறார் கங்குலி. இதில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இப்படி இருந்தும் கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் உட்பட பதிமூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது.
இதன் காரணமாக ஐபிஎல் உலகம் அதிர்ந்து போனது.

ஆனால் இதனை மிக எளிதாக கையாண்டார் சௌரவ் கங்குலி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உடனடியாக சுதாரித்துக்கொண்டு அனைத்து வீரர்களையும் மேலும் ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தி விட்டது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் பேட்ஸ்மேன் ருதுராஜ் ஆகிய இருவரும் வைரஸால் பாதிக்கப்பட்டு தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டார்கள். இப்படி இருக்கையில் இன்னும் பலருக்கு பல்வேறு அணிகளில் இருக்கிறது போலிருக்கிறது.

csk

அந்த வகையில் டெல்லி கேப்பிடல் அணியில் பிசியோதெரபிஸ்டாக இருக்கும் ஒரு நபருக்கு தற்போது இந்த கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதனை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிர்வாகி உதவி செய்துள்ளார் அவர் கூறுகையில் …எங்களது அணியில் துணை பிசியோதெரபி ஆக இருக்கும் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது. மொத்தம் மூன்று முறை டெஸ்ட் எடுத்தோம். முதல் இரண்டு முறை நெகட்டிவ் என்று வந்தது மூன்றாவது முறை பாசிட்டிவ் என்று வந்துவிட்டது.

- Advertisement -

Kaif

இதன் காரணமாக அவரை உடனடியாக தனிமைப் படுத்தி விட்டோம் என்று தெரிவித்திருக்கிறார் அந்த அதிகாரி. டெல்லி கேப்பிடல் அணி இந்த முறை மிகவும் திறமை வாய்ந்த இளம் அணியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை இந்த அணி கோப்பையை வெல்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறினார்.