இம்முறை சென்னை அணியை விட டெல்லி அணி இந்த விஷயத்தில் கெத்தா இருக்கும் – முன்னாள் வீரர் கணிப்பு

csk vs dc

ஐபிஎல் தொடரில் வரும் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இத்தொடர் துவங்கவுள்ள நிலையில் அனைத்து அணி வீரர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இத்தொடர் நடப்பதால் இந்திய ஆடுகளங்களில் விட சற்று மந்தமானதாகவும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாகவும் இருக்கும் என்று விமர்சகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Dubai

குறிப்பாக இரண்டாவது பாதியில் இங்குள்ள மூன்று மைதானங்களில் தன்மையும் அப்படியே தலைகீழாக மாறிவிடும் என்று தெரிவித்திருக்கின்றனர். அதாவது மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறி விடுமாம். இதன் காரணமாக எந்த அணியில் சுழற்பந்து வீச்சின் பலமான அணியாக இருக்கிறதோ அவர்கள்தான் போட்டியை ஜெயிப்பார்கள்.

அதுமட்டுமின்றி இந்த முறை சுழற்பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் அணியே கோப்பையை வெல்ல மிகப் பெரிய அளவில் சாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சு கட்டமைப்பை கொண்டிருக்கும் . ஆனால் இந்த வருடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அந்த அணிதான் மிகச் சிறந்தது என்று கூறியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

Mishra 1

அவர் கூறுகையில்.. டெல்லி அணி எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை மிகச் சிறந்த அணியாக இருக்கிறது.

- Advertisement -

பல இந்திய வீரர்கள் இருக்கிறார்கள், துவக்க வீரர்களுக்கு பஞ்சமில்லை இந்த அணியில் கடைசியில் இறங்கி அதிரடியாக ஆடுவதற்கு தான் கடந்த பல ஆண்டுகளாக வீரர்கள் இல்லாமல் இருந்தனர். ஆனால் இந்த முறை அலெக்ஸ் கேரி, மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், ஹெட்மயர் போன்ற அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள்.

Sandeep

இதனால் இதிலும் கவலை இல்லை சுழற்பந்து வீச்சை பொருத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, சந்தீப் லாம்ச்சினே மற்றும் அக்சர் படேல் போன்ற மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்த மூவருமே ஆடுவார்கள். அப்போது டெல்லி அணியின் மிகச்சிறந்த பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.