இந்த வருட ஐபிஎல் தொடர் யாரும் எதிர்பாராத வகையில் சற்று வித்தியாசமான மாற்றங்கள் உடன் நடைபெற்று வருகிறது. மும்பை அணியும் வழக்கம் போல் நன்றாக செயல்பட்டு வரும் வேளையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் சரியாக செயல்படவில்லை. தற்போது வரை ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டது .
இந்நிலையில் எந்த அணி இந்த முறை நன்றாக செயல்படுகிறது என்றும் இந்த ஆண்டு எந்த அணிக்கு கோப்பையை வெல்ல மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சாம்பியன் ஆக அதிக வாய்ப்பு இருக்கும் இரண்டு அணிகளில் வழக்கம் போல மும்பையும் இடம் பிடித்துள்ளது. மும்பை அணி வழக்கம்போல் அசுரத்தனமாக விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோற்று இருந்தாலும் கடந்த தடவை போலவே இந்த தொடரிலும் அந்த அணி மீண்டு வந்து தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்று கொண்டிருக்கிறது. வலிமையான அதிரடியாக ஆடும் வீரர்கள், சிறப்பான பீல்டர்கள் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறந்த கேப்டன் என இந்த அணி மிகவும் வலுப்பெற்றது பிரம்மாண்டமாக இருக்கிறது.
மற்றொரு அணியை பார்த்தோம் என்றால் இளம் வீரராக கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயாஸ் ஐயர் இருக்கும் டெல்லி அணி தான். இந்த அணியின் பயிற்சியாளராக பாண்டிங் இருப்பதால் சற்று வித்தியாசமான மாற்றத்தை கடந்த மூன்று வருடங்களில் பார்த்திருக்கிறது. இந்த வருடம் இந்த அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 2 அல்லது 3 போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் பிளே ஆப் சுற்றுக்கு மிக எளிதில் சென்று விடும். இந்த அணியில் அனைத்து டிபார்ட்மென்ட்டும் மிகச் சிறப்பாக உள்ளது. பேட்டிங், பந்துவீச்சு பீல்டிங் என ஒவ்வொன்றும் சரியாக இந்த அணியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஷ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த கேப்டனாகவும் உருவாகி இருக்கிறார். இதுதான் இந்த வருடம் கோப்பையை வெல்ல மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் அணிகளாக விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர்.