CSK vs DC : சென்னை அணியை இன்று டெல்லி அணி மிரட்டும் – விவரம் இதோ

சென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது இன்று நடக்கவுள்ள டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெல்லி அணி சன் ரைசர்ஸ்

Iyer
- Advertisement -

சென்னை அணி மும்பை அணியுடன் நடந்த முதல் குவாலிபயர் சுற்றில் தோல்வி அடைந்து தற்போது இன்று நடக்கவுள்ள டெல்லி அணியுடனான போட்டிக்கு தயாராகி வருகிறது. டெல்லி அணி சன் ரைசர்ஸ் அணியை தோற்கடித்து தற்போது மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட அணியாக வலம் வருகிறது.

Pant

- Advertisement -

ஏற்கனவே மும்பை அணியுடன் தோற்று உள்ள சென்னை அணி பேட்டிங்கில் சற்று சொதப்பி வருகின்றது. இருப்பினும் சென்னை அணி இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் பலரும் கூறிவருகின்றனர். ஆனால், இந்த போட்டியில் டெல்லி அணி நிச்சயம் சென்னை அணியை மிரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் இதோ :

சென்னை அணியின் தற்போதைய பலம்பந்துவீச்சில் மட்டுமே. ஹர்பஜன், ஜடேஜா மற்றும் தாஹிர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். ஆனால், இன்றைய போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரர்கள் அவர்களை சிறப்பாக எதிர்க்கொள்ள தயாராகி வருகின்றனர். மேலும், பேட்டிங்கில் சென்னை அணி தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.

Watson-1

வாட்சன் ஒரு ஒரு மேட்ச் மட்டுமே நன்றாக விளையாடினார் அதன்பிறகு சிறப்பான ஆட்டத்தை இன்னும் அவர் வெளிப்படுத்தவில்லை. அதைப்போன்று டுபிளிஸ்சிஸ், ரெய்னா மற்றும் ராயுடு ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். தற்போது சென்னை அணியில் தோனி மட்டுமே தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வழங்கி வருகிறார்.

- Advertisement -

Pant-1

ஆனால், டெல்லி அணி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலமடங்கு பலமாக மாறியுள்ளது. இளம் வீரர்களின் ஒட்டுமொத்த செயல்பாடும் சிறப்பாக உள்ளது. ப்ரித்வி ஷா, தவான், பண்ட் மற்றும் ஐயர் என அனைவரும் பேட்டிங்கில் கலக்கி வருகின்றனர். மேலும், போல்ட், மிஸ்ரா, இஷாந்த் மற்றும் அக்சர் பட்டேல் என பந்துவீச்சில் மிரட்டுகின்றனர்.

Mishra 1

இந்த வருட தொடரில் இதுவரை இரண்டுமுறை சென்னை அணி டெல்லி அணியை தோற்கடித்து இருந்தாலும், இந்த குவாலிபயர் 2 சுற்றில் சென்னை அணி டெல்லி அணியிடம் நிச்சயம் வெற்றிக்காக போராடும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

Advertisement