- Advertisement -
ஐ.பி.எல்

சாதனையுடன் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்திய டெல்லி கேபிட்டல்ஸ் அணி – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டியானது நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சாதனையுடன் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களையும் பிரியான்ஷ் ஆர்யா 56 ரன்களையும் குவித்து அசத்தினர். டெல்லி அணி சார்பாக மிட்சல் ஸ்டார்க் மற்றும் மாதவ் திவாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 56 ரன்களையும், டேவிட் மில்லர் 51 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணி தொடர்ச்சியாக தங்களது நான்காவது தோல்வியை பதிவு செய்துள்ளது.

அதே வேளையில் டெல்லி அணி தங்களது ஐந்தாவது வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்து ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி ஒரு மாபெரும் சாதனையையும் ஐ.பி.எல் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளது. அதாவது நேற்றைய போட்டியில் இவர்கள் துரத்திய 211 ரன்கள் என்கிற இலக்கினை வெற்றிகரமாக எட்டிப் பிடித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் தங்களது இரண்டாவது பெரிய சேஸிங் வெற்றியாக இந்த வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணி இப்படி ஒரு மோசமான சரிவை சந்திக்க இதுவே காரணம் – ஹர்பஜன் சிங் கருத்து

இதற்கு முன்னதாக ஜெய்ப்பூர் நகரில் இதே ஆண்டு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 226 ரன்களை அவர்கள் சேசிங் செய்ததே இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் அவர்கள் சேசிங் செய்த பெரிய வெற்றியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -