நாளுக்கு நாள் பலம் சேர்த்துக்கொண்டே செல்லும் டெல்லி அணி. கப் ஜெயிச்சிடுவாங்களோ – விவரம் இதோ

Shaw
- Advertisement -

ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை அணி 4 முறையும், சென்னை அணியை மூன்று முறையும் கொல்கத்தா இரண்டு முறையும் கோப்பையை வென்று இருக்கிறது. மற்ற அணி எல்லாம் இந்த அணிகளுடன் எவ்வாறு போட்டியிடுவது என்பதற்காகவே தங்களை ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் வெற்றிக்காக அணிகளை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதல் முறையாக கோப்பையை வெல்ல பெங்களூரு, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

dc

அந்த வகையில் இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள ஒரு அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதற்கு முக்கிய காரணங்களாக சில அம்சங்கள் பார்க்கப்படுகின்றன. அதாவது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் கைப், கங்குலி ஆகியோர் இந்த அணிக்கு பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் இருந்து வருகிறார்கள். அவர்களது ஆலோசனை இந்த அணிக்கு பலத்தை சேர்க்கும் மேலும் தற்போது இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டெல்லி அணி செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டே ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி இந்த ஆண்டும் அதே ஆட்டத்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அணியில் ஷிகர் தவான், ஐயர், ப்ரித்வி ஷா, பண்ட், ரஹானே என இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமே இல்லாத காரணத்தினால் அவர்கள் நிச்சயம் தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை வைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பை கைப்பற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Harris

இந்நிலையில் தற்போது இந்த அணிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ரியான் ஹாரிஸ் தற்போது பௌலிங் கோச் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியில் இஷாந்த் சர்மா, ரபாடா, அஷ்வின் அமித் மிஸ்ரா ஆகிய சீனியர் பவுலர்கள் இருப்பதால் அவர்களின் பௌலிங் திறன்களை ஹாரிஸ் நிச்சயம் இந்த தொடரில் பெரிய அளவில் வெளிப்படுத்துவார்.

- Advertisement -

இதன் மூலம் இவரின் இந்த வருகை மூலம் டெல்லி அணி மேலும் பலப்பட்டுள்ளது. இம்முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் டெல்லி அணியும் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் நிச்சயம் மற்ற அணிகளுக்கு கடுமையான போட்டியை அளிப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

Dc 1

புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரியான் ஹேரிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 113 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 44 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அனுபவம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஏற்கனவே பிக்பேஷ் டி20 லீக் போன்ற வெளிநாட்டு டி20 தொடர்களில் அவர் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement