ராஜஸ்தான் அணியை தொடர்ந்து டெல்லி அணி செய்த நிதியுதவி – ரசிகர்கள் வரவேற்பு (எவ்வளவு தொகை தெரியுமா ?)

- Advertisement -

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டு வருகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் சராசரியாக 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் பலி எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்துவருகின்றனர். மக்கள் அனைவரையும் பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் கொரனோ நாளுக்கு நாள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து அனைவரையும் பலிகடா ஆக்கி வருகிறது.

Corona-1

- Advertisement -

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சரியான படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஆகி வந்துள்ளது. இந்தியா கஷ்டபட்டு பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் 37 லட்சம் ரூபாய் இந்திய மக்களுக்காக நிதி உதவி அளித்தார். அதேசமயம் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ 41 லட்சம் நிதியுதவி அளித்தார். நேற்று இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார்.

இவர்கள் நிதி உதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களையும் நிதி உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்று 7 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஆசியன் டிரஸ்ட் இணைந்து, ராஜஸ்தான் அணியின் சப்போட் ஸ்டாஃப், பயிற்சியாளர்கள், வீரர்கள் என அனைவரிடமும் நிதி வசூலித்து 7 கோடியே 50 லட்சம் ரூபாய் இந்திய மக்களுக்காக தந்துள்ளது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதேசமயம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, அந்த அணி சார்பாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் இந்திய மக்களுக்காக நிதி உதவி செய்துள்ளனர். இந்த இவ்விரு அணிகள் நிதி உதவி செய்ததோடு மட்டுமல்லாமல் மற்ற அணிகளையும் உதவி செய்யுமாறு வலியுறுத்தி உள்ளனர். தற்பொழுது இருக்கும் சூழலில் ஐபிஎல் தொடர் அவசியம்தானா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இவ்வாறு அணிகள் நிதி உதவி செய்வது அனைத்து மக்களையும் சந்தோஷப்படுத்தி உள்ளது. மேலும் ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு ஒரே காரணம், மக்கள் கஷ்டமான சூழ்நிலையில் சிரித்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.

dc

இந்த மாதிரியான சூழ்நிலையில் மனரீதியாக மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் தேவை. ஐபிஎல் தொடர் நிச்சயமாக அவர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்காக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து அணிகளும் தங்களால் முடிந்தவரை மக்களை சந்தோஷப்படுத்துவது வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் அனைத்து அணிகளுக்கும் மக்களைப் பற்றிய சிந்தனையும், பொறுப்பும் தங்களுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement