டூபிளெஸ்ஸிஸ் ரன்அவுட் ஆகியும் அவர் நாட் அவுட்டாக மாறியதன் விதிமுறை இதுதான் – இதை நோட் பண்ணீங்களா ?

faf 3
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியானது, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த சாம்பியன் அணிகளாக விளங்குவதால் இப்போட்டியானது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

cskvsmi

இப்போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை அடித்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாட தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டுயூப்ளசிஸ் 27 ரன்கள் அடித்திருந்த போது மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான குயின்டன் டீ காக் அவரின் ரன் அவட்டை தவறவிட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலர் ஜேம்ஸ் நீஷம் வீசிய 10வது ஓவரின் மூன்றாவது பந்தை மிக் விக்கெட் திசைக்கு அடித்துவிட்டு இரண்டு ரன் ஒட முயற்சித்தார் டுயூப்ளசிஸ்.

faf-2

ஆனால் அவர் கிரீசிற்கு வருவதற்கு முன்பே பந்து டீகாக்கிடம் வந்துவிட்டது. ஆனால் அவர் பந்தை பிடித்து அடிப்பதற்கு முன்பே, ஸ்டம்பில் இருந்த பைல்ஸை தவறுதலாக தட்டிவிட்டிருந்தார். இதனை ரீப்ளே செய்து பார்க்கும் போது நன்றாக தெரிந்தது. எனவே டுயூப்ளசிஸ் கிரீசிற்குள் வராமல் இருந்திருந்தாலும் அவருக்கு நாட் அவுட் வழங்கினார் மூன்றாவது நடுவர். மேலும் பந்து கைகைக்கு வரும் முன் பைல்ஸ் கீழே விழுந்தால் பந்தை பிடித்ததும் ஸ்டம்பை கையில் எடுக்க வேண்டும் ஆனால் அதற்குள் டூபிளெஸ்ஸிஸ் கிரீசுக்குள் வந்ததால் அந்த விதிமுறையின் படி ரன் அவுட்டில் இருந்து தப்பித்தது குறிப்பிடத்தக்கது.

faf 4

இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட டுயூப்ளசிஸ் அற்புதுமாக ஆடி அரைசதம் அடித்திருக்கிறார். 28 பந்துகளை எதிர்கொண்ட டுயூப்ளசிஸ் 50 ரன்கள் அடித்து பொல்லார்ட் வீசிய பந்தில் அவுட்டானார். இதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடக்கம். தற்போது 219 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்குவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

Advertisement