நியாபகமறதியில் பேட்டிங் செய்ய வந்த டிகாக். அடக்கமுடியாமல் சிரித்த ரோஹித் – வைரலாகும் வீடியோ

Dekock

ஐபிஎல் தொடரின் 32 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக தேர்வு செய்தார்.

kkrvsmi

அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி மிக மோசமாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 148 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கம்மின்ஸ் 53 ரன்களும் மோர்கன் 39 ரன்களை குவித்தனர். அதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

அந்த அணியின் துவக்க வீரர் குவிண்டன் டிகாக் 78 ரன்களும் பாண்டியா 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி போட்டியை எளிதில் வென்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது. ஆட்டநாயகனாக டிகாக் தேர்வானார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது சேசிங்கின் போது இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். அப்போது பயிற்சியின் போது அணியும் பயிற்சி பேண்டை அணிந்து களமிறங்கினார். இதனை அவர் பெரிதாக கவனிக்கவில்லை. ஆனால் ரோஹித் முன் சென்றதும் தான் பயிற்சி பேண்ட்டுடன் வந்திருப்பதை உணர்ந்ததார்.

- Advertisement -

அதன்பிறகு தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை எடுத்து வெளியில் விட்டார். இதனை கண்ட ரோகித் சர்மா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டே நடந்தார். இருப்பினும் அந்த பேண்டை அணிந்துகொண்டு டிஷர்ட்டை இறக்கி விட்டு பேட்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.