முதல் ஓவரிலேயே அரங்கேறிய சதி. சூழ்ச்சியில் சிக்கியதா சி.எஸ்.கே – படுதோல்வியின் எதிரொலி (ரசிகர்கள் கோபம்)

MI vs CSK
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 12-ஆம் தேதி நடைபெற்ற 59-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்தித்தன. ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த இந்த 2 அணிகளும் ஏற்கனவே இந்த வருடம் தொடர் தோல்விகளால் புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களை பிடித்ததுடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் இழந்தன. இருப்பினும் கூட பரம எதிரிகளாக ஐபிஎல் தொடரில் இதர அணிகளை காட்டிலும் அதிக ரசிகர்களை கொண்ட இவ்விரு வெற்றிகரமான அணிகள் மோதியதால் இப்போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதை தொடர்ந்து துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

CskvsMi

- Advertisement -

அரங்கேறிய சதி:
அதனால் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினார்கள். முதல் ஓவரை டேனியல் சாம்ஸ் வீசிய நிலையில் 2-வது பந்தை எதிர்கொண்ட டேவோன் கான்வே சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

இருப்பினும் அது அவுட்டில்லை என உணர்ந்த கான்வே உடனடியாக ரிவியூ செய்ய அம்பயரிடம் கோரினார். ஆனால் அப்போதுதான் மிகப் பெரிய சதி செய்யப்பட்டது அம்பலமானது. ஏனெனில் அந்த நேரத்தில் போட்டி நடைபெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் பவர்கட் என்பதால் ரிவியூ செய்ய முடியாது என்று அம்பயர் தெரிவித்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.

1. ஏனெனில் ஐசிசி நடத்தும் உலக கோப்பைக்கு ஈடாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் வரலாற்றில் ஒரு முறை கூட இதுபோல் ரிவியூ செய்தபோது மின்சாரம் இல்லை என்ற சம்பவம் நிகழ்ந்ததே கிடையாது.

- Advertisement -

2. மேலும் அவ்வளவு பெரிய மைதானத்தில் ராட்சத மின்விளக்குகள் எரியும் அளவுக்கு இருந்த மின்சாரம் ரிவியூ செய்வதற்கு மட்டும் ஏன் இல்லாமல் போனது என்று யாருக்குமே தெரியவில்லை என்பதால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபத்தை வெளிபடுத்தினர்.

3. அத்துடன் கான்வே எதிர்கொண்ட அந்த பந்து பிட்ச்சிங் அவுட் சைட் ஆஃப் பகுதியில் பட்டதால் கண்டிப்பாக பெரும்பாலான அம்ப்யர்கள் அவுட் கொடுக்க மாட்டார்கள். ஆனால் எதையுமே யோசிக்காமல் உடனடியாகக களத்திலிருந்த அம்பயர் கையை உயர்த்திய நிலையில் ரீப்ளேயில் பார்க்கும் போது தெளிவாக அவுட்டில்லை என்பது பார்த்த அத்தனை ரசிகர்களுக்கும் அப்பட்டமாக தெரிந்தது. அதனால் ரிவ்யூ எடுத்திருந்தால் கண்டிப்பாக அவர் அவுட்டாகியிருக்க மாட்டார்.

- Advertisement -

மொத்தமாக 2.4 ஓவர் வரை வான்கடே மைதானத்தில் பவர் இல்லாமல் போட்டி நடைபெற்ற நிலையில் அதற்கிடையே ராபின் உத்தப்பாவும் அதேபோன்ற எல்பிடபிள்யூ முறையில் ரிவ்யூ எடுக்க முடியாமல் சந்தேகத்துடன் பரிதாபமாக அவுட்டாகி சென்றார். அதன்பின் 3-வது ஓவருக்கு பின் பவர் வந்தும் பயனில்லாத வகையில் அடுத்ததாக ருதுராஜ் கைக்வாட் 7 (6) மொய்ன் அலி 0 (2) அம்பத்தி ராயுடு 10 (14) ஷிவம் துபே 10 (9) என முக்கிய சென்னை வீரர்கள் அனைவரும் வரிசையாக மும்பையின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பெவிலியன் திரும்பினர்.

MS Dhoni vs MI

சரணடைந்த சென்னை:
அதனால் 39/6 என திணறிய சென்னை 50 ரன்களை தாண்டாது என்று நினைத்தபோது ப்ராவோ 12 (15) உட்பட எஞ்சிய அனைவரும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். ஆனால் மறுபுறம் கேப்டன் தோனி தனி ஒருவனை போல 4 பவுண்டரி 2 சிக்சருடன் 36* (33) ரன்கள் எடுத்து ஓரளவு மானத்தை காப்பாற்றி கடைசி வரை அவுட்டாகாமல் நின்ற போதிலும் 16 ஓவரில் சென்னை 96 ரன்களுக்கு சுருண்டு ஐபிஎல் வரலாற்றில் தனது 2-வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்களை எடுத்தார்.

அதை தொடர்ந்து 98 என்ற சுலபமான இலக்கை துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 18 (14) இஷான் கிசான் 6 (5) டானியல் சாம்ஸ் 1 (6) த்ரிசன் ஸ்டப்ஸ் 0 (2) என பவர்பிளே ஓவர்களில் பட்டசாக பந்துவீசிய சென்னையும் கடும் நெருக்கடி கொடுத்தது. அந்த நிலையில் திலக் வர்மாவும் தோனியிடம் கேட்ச் கொடுத்தபோது அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் அதை அவர் ரிவியூ செய்யும்போது மட்டும் பவர் வந்துவிட்டதால் தப்பிய திலக் வர்மா 34* (32) ரன்களும் ஷாக்கீன் 18 (23) ரன்களும் டிம் டேவிட் 16* (7) ரன்களும் எடுத்ததால் 14.5 ஓவர்களில் போராடி 103/5 ரன்களை எடுத்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

MI vs CSK 2

ஏற்கனவே முதல் அணியாக வெளியேறிய மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என கொஞ்சம் நம்பிக்கையுடன் சுற்றி வந்த சென்னையை தோற்கடித்து அந்தக் கனவை மொத்தமாக முடித்து 12 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து ஆறுதலடைந்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய சென்னைக்கு பந்துவீச்சில் மிரட்டலாக செயல்பட்ட முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்காக போராடினார். இதனால் பங்கேற்ற 12 போட்டிகளில் 8-வது தோல்வியை பதிவு செய்வது சென்னை 2020க்கு பின் மீண்டும் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.

Advertisement