IND vs ZIM : பேட்டிங் செய்ய இறங்காமலே மாபெரும் சாதனையை படைத்த தீபக் ஹூடா – அப்படி என்ன சாதனை?

Deepak-Hooda
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Shikhar-Dhawan

- Advertisement -

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.5 ஓவர்களிலேயே விக்கெட் எதுவும் இழக்காமல் 192 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியில் விளையாடிய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா பேட்டிங் செய்ய களத்தில் இறங்காமலேயே ஒரு மிகப்பெரிய உலக சாதனையை படைத்துள்ளார். அப்படி என்ன சாதனை என்பதை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

Deepak Hooda

அதன்படி இந்திய அணிக்காக கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகமாகிய தீபக் ஹூடா இதுவரை இந்திய அணிக்காக 6 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்படி இவர் இந்திய அணிக்காக விளையாடிய 15 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக ஒரு வீரராக அணியில் அறிமுகமானதிலிருந்து தொடர்ச்சியாக வெற்றி கண்ட வீரர் என்ற சாதனையை பட்டியலில் இவர் ரோமானியா வீரருடன் தற்போது சமநிலையில் உள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற வீரராக அவர் முதலிடத்திற்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : CSK : சி.எஸ்.கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா நீக்கப்பட்டதற்கு தோனி தான் காரணமாம் – என்ன நடந்தது?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை ஜிம்பாப்வே தலைநகரான ஹராரே நகரில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement