வீடியோ : என்ன ரெண்டு பேரும் ஒரே பக்கமா ஓடுராங்க ? மைதானத்தில் ஏற்பட்ட குழப்பம் – வைரலாகும் ரன்அவுட் வீடியோ

Hooda

ஐபிஎல் தொடரின் 29வது போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.

dcvspbks

அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி தற்போது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்துள்ளது. இதன் காரணமாக 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாட தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சிம்ரன் சிங் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததும் அதிரடி வீரரான கெயில் களமிறங்கினார்.

கெயில் மற்றும் அகர்வால் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிறிஸ் கெயில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா வீசிய புல்டாஸ் பந்தை கணிக்கத் தவறி போல்டாகி வெளியேறினார். அதன் பின்னர் டேவிட் மலானுடன் இணைந்து அகர்வால் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 3-வது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 52 ரன்கள் குவித்தனர்.

Gayle

அதன்பின்னர் பஞ்சாப் அணியின் வீரர்கள் வருவதும் போவதுமாக இருக்க ஒரு பக்கம் மயங்க் அகர்வால் மட்டும் 58 பந்துகளில் 4 சிக்சர்கள் 8 பவுண்டரிகள் என 99 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் அகர்வால் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற ரன் அவுட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களிடையே இந்த ரன் அவுட் வீடியோ பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

- Advertisement -

ஏனெனில் சிங்கிள் எடுக்க எடுக்க ஆசைப்பட்டு பந்தை பார்க்காமல் தீபக் ஹூடா ஓடி வர அதனை வேண்டாம் என்று மயங்க் அகர்வால் மறுத்து திரும்பி கிரீசிற்கு ஓடினார். அதனை கவனிக்காத ஹூடா தானும் அதே கிரீசை நோக்கி ஓட முன்னதாக அகர்வால் ரீச் ஆனதால் ஹூடா ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ :