ஐ.பி.எல் வரலாற்றில் வித்தியாசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆன தீபக் ஹூடா – விவரம் இதோ

Hooda-2
- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணி பேட்டிங் செய்யும்போது ஒரு ஆச்சரியமான விஷயம் நடந்தது. அது என்னவென்றால் கிறிஸ் கெய்ல் அவுட்டாகி வெளியேறியப் பின்னர் பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிகோலஸ் பூரான் உள்ளே வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் பேட்டிங் ஆட வந்தவரோ தீபக் ஹூடா.

hooda 1

- Advertisement -

உள்ளே வந்த தீபக் ஹூடா முதல் பந்திலிருந்தே அட்டாக்கிங் செய்ய ஆரம்பித்தார். ராஜஸ்தான் அணி வீசிய பந்துகளை பவுண்டரியும், சிக்ஸர்களாக மாற்றிய ஹூடா அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். கடைசியில் அவர் 28 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் அடக்கம். இவரின் இந்த அதிரடியான ஆட்டம் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

இந்தப்போட்டியில் 20 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் யாரும் கிடைக்காத ஒரு வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார்.

hooda

அந்த சாதனை யாதெனில் இந்திய அணிக்காக அறிமுகமாகாத ஒரு வீரர் ஐ.பி.எல் தொடரில் 23 பந்துகளுக்குள் இருமுறை அரை சதம் அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நேற்றைய போட்டியில் தீபக் ஹூடாவின் அதிரடி ஆட்டமே பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

மேலும் தான் பரோடா அணிக்காக விளையாடும்போது அந்த அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியாவால் ஏற்பட்ட அவமானம் காரணமாகவே இந்த போட்டியில் விளாசி தள்ளினார் என்ற செய்திகளும் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement