மலைபோன்ற வீரரின் எதிரே சென்று கிண்டல் செய்த தீபக் சாகர் – வீடியோ இதோ

Chahar
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக தடை பட்டுள்ளதால் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

Rahkeem-Cornwall

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய வீரராக ரஹீம் கார்ன்வால் என்ற புதுமுக வீரர் இடம்பிடித்துள்ளார். இவரது உயரம் 6.6 அடி இவரது எடை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு 140 கிலோ கொண்ட மிகப் பிரம்மாண்டமான வெயிட் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த மாதம் இந்திய ஏ அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கும் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வீரரான தீபக் சாஹர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரம்மாண்ட நாயகன் ரஹீம் கார்ன்வெல் எதிரே நடந்து சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

ரஹீம் கார்ன்வெல் பேட்டிங் இறங்கி நடந்து வரம் போது அவரின் வழியே நடந்து சென்ற அவரை பார்த்து மவுண்டைன் மேன் அப்படி என்றால் மலை போன்ற மனிதர் என்று கூறிவிட்டு சிரித்துவிட்டு அவரிடமிருந்து சற்று நகர்ந்து நடந்தார். இதை எதுவும் கவனிக்காமல் பேட்டிங் பிடிக்க மைதானத்துக்கு வேகமாக ரஹீம் கார்ன்வெல் நடந்து சென்றார்.

Advertisement