தோனி எனக்கு டெய்லி போன் பண்ணி திட்டிட்டு அட்வைஸ் கொடுப்பாரு – சி.எஸ்.கே வீரர் பகிர்ந்த தகவல்

dhonidecision

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வரை படு வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை, பணக்காரர் என வித்தியாசமின்றி தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தனது கோரத்தாண்டவத்தை நடத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் கிரிக்கெட் வீரர்களையும் விட்டுவைக்கவில்லை.

பாகிஸ்தானில் 7 கிரிக்கெட் வீரர்கள் ,வங்கதேசத்தில் 4 வீரர்கள், தென் ஆப்பிரிக்காவை மூன்று கிரிக்கெட் வீரர்கள் என பலரையும் பாதித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் பாதுகாப்பாக வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். அதன் காரணமாக இந்திய வீரர்கள் எங்கேயும் பயிற்சிக்கு செல்ல முடியாது. பயிற்சி முகாமை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை. வீரர்கள் இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது ஐ.பி.எல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு அணியின் வீரர்கள் தாங்களாகவே தங்கள் வீட்டில் உடற்பயிற்சியை செய்து வருகிறார்கள். பல வீரர்கள் தங்களது உடலை இந்த காலகட்டத்தில் சரியாக வைக்கவில்லை என்றே தெரிகிறது.

Chahar4

இந்நிலையில் இந்த லாக்டவுன் காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது அணியின் கேப்டன் தோனியுடன் பேசிய ஒரு உரையாடல் பற்றி வெளியே கூறியுள்ளார். அவர் கூறுகையில்…

- Advertisement -

இந்த ஊரடங்கு காலத்தில் நான் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வந்தேன். இந்த காலகட்டத்தில் தோனி என்னை தினமும் தொலைபேசியில் அழைப்பார். மேலும் ஏன் அவ்வப்போது காயம் அடைந்து விடுகிறாய்? என்று கேட்டார். உனது ஆற்றல் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே இருப்பதற்கான காரணம் என்ன? காயம் அடைவதற்கான காரணத்தைகேட்டு விட்டு எனக்கு ஒரு சில பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்தார்.

chahar

மேலும் 28 வயதில் இப்படி உடல் தகுதி இல்லாமல் இருக்கக்கூடாது நீ இன்னும் பல நூறு போட்டிகளில் ஆட வேண்டியிருக்கிறது என்று கூறினார். அப்போதுதான் நான் தோனியின் மற்றொரு பக்கத்தை புரிந்து கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் தீபக் சாகர்.