கனவில் கூட நினைக்காதது நடந்தது. ஹாட்ரிக் நாயகன் தீபக் சாகர் – பேட்டி

Chahar-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை பங்களாதேஷ் அணி தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் 5 விக்கெட் இழப்பிற்கு முடிவில் 174 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக ஐயர் 62 ரன்களும் லோகேஷ் ராகுல் 52 ரன்களும் அடித்து அணியின் ரன் குவிப்புக்கு உதவினர்.

Deepak-Chahar

- Advertisement -

பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணி 19.2 ஓவர்களில் 144 ரன்களே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் பந்து வீச்சாளரான தீபக் சாஹர் சிறப்பாக பந்து வீசி 7 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தியது மாடவுமின்றி கடைசி 3 விக்கெட்டுகளையும் தொடர்ச்சியாக வீழ்த்தி ஹாட்ரிக் சாதனையும் படைத்தார். போட்டி முடிந்து பேசிய தீபக் சாகர் கூறியதாவது : நான் இதனை நினைத்து கூட பார்க்கவில்லை. சொல்லப்போனால் என் கனவில் கூட இதுபோன்று நடந்தது கிடையாது. நான் தொடர்ந்து கடினமான பயிற்சியை சிறு வயதிலிருந்தே மேற்கொண்டு வருகிறேன். அந்த முயற்சிக்கு கிடைத்த பரிசாக இந்த போட்டியை நான் நினைக்கிறேன்.

Chahar

ரோஹத் மற்றும் அணி நிர்வாகமும் என்னை முக்கியமான நேரங்களில் பந்துவீசவைக்க நினைத்தனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நான் இந்த போட்டியில் செயல்பட்டேன் என்று நினைக்கிறன். அடுத்த பந்தில் என்ன நடக்கும் என்பதை கணித்து நான் பந்துவீசி வருகிறேன் மேலும் என்னுடைய இந்த சிறப்பான பந்து வீச்சில் தொடர்ந்து எடுத்துச் செல்லவும் முழுமையாக எனது வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நான் நினைக்கிறேன் என்று தீபக் சஹர் கூறியது கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement