தோனியின் பழைய அதிரடி அவரிடம் மிஸ்ஸாக இதுவே காரணம். ஆனா செப்டம்பர்ல வேறமாதிரி ஆடுவாரு – தீபக் சாகர் பேட்டி

Chahar

கடந்த வருடம் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலிருந்தே பேட்டிங் விளையாட சிரமப்பட்டு வரும் சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோணி, செப்டம்பரில் தொடங்க இருக்கும் இந்த ஆண்டு ஐபிஎல்லின் இரண்டாவது பாதியில் அற்புதமாக விளையாடி தனது பேட்டிங் திறமையை நிரூபிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளரான தீபக் சஹார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய சென்னை அணி, ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

Dhoni-1

ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் பழைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாக மீண்டும் உருவெடுத்த அந்த அணி, 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சென்ற ஆண்டு தொடரின்போது, ஃபார்ம் அவுட்டான சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்த ஆண்டு தொடரில் மீண்டும் தங்களது திறமை என்னவென்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஆனால் அந்த அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோணி மட்டும் இன்னும் தனது அதிரடியான ஆட்டத்திற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

சென்ற ஆண்டு தொடரில் 116 என்ற மிக குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டுடன் 200 ரன்களை மட்டுமே அடித்த அவர், இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 37 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மகேந்திர சிங் தோணியின் இந்த பேட்டிங் பிரச்சனை குறித்து பேசிய தீபக் சஹார், ஒரு பேட்ஸ்மேனால் 15-20 வருடங்கள் வரை ஒரே மாதிரியான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியாது. மேலும் ஐபிஎல் தொடருக்கு முன்பு வரை எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல், நேரிடையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒரு வீரரால் சிறப்பாக செயல்பட முடியாது. அதற்கு கொஞ்சம் நேரம் ஆகும்.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களிலும் ஆரம்பத்தில் ரன் குவிக்க தவறிய தோணி அதற்குப் பிறகான போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதுபோலவே அவர் செப்ம்பரில் தொடங்க இருக்கும் ஐபிஎல்லின் இரண்டாவது பாதி போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தான் ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபிப்பார் என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

Dhoni-1

கொரானா பரவல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் எஞ்சிய 31 போட்டிகளும் வருகிற செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி முடிவடையும் என அறிவித்துள்ளது பிசிசிஐ வட்டாரம்.

Advertisement