தவறு மேல் தவறு, ஜடேஜாவின் மாற்றாக அக்சருக்கு பதில் அவரை எடுத்திருக்கனும் – தேர்வுக்குழுவை விளாசும் முன்னாள் வீரர்

Ravindra Jadeja
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா லீக் சுற்றில் பங்கேற்ற 2 போட்டிகளிலும் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் அழுத்தம் நிறைந்த சூப்பர் 4 சுற்றில் வழக்கம்போல முக்கிய தருணங்களில் சொதப்பிய இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானிடம் போராடி தோல்வியடைந்தது. அந்த முக்கியமான போட்டியில் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் சொதப்பலான செயல்பாடுகளும் தவறான அணி தேர்வும் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. குறிப்பாக காயத்தால் வெளியேறிய ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் சேர்க்கப்பட்ட தீபக் ஹூடாவுக்கு சஹால், பாண்டியா போன்ற இதர பவுலர்கள் தடுமாறியபோது ஒரு ஓவர் கூட பந்து வீசுவதற்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பு வழங்காதது நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது.

IND vs PAK Deepak Hooda INdia

- Advertisement -

அதேபோல் இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய 2 வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தால் விலகிய நிலையில் அவர்களுடைய இடத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய சீனியர் பவுலர் புவனேஸ்வர் குமார் 19வது ஓவரில் 19 ரன்களை வாரி வழங்கி வெற்றியையும் தாரை வார்த்தார். அதுபோக அந்த 2 முக்கிய பவுலர்களுக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட ஆவேஷ் கான் முதல் 2 போட்டிகளில் ரன்களை வாரி வழங்கியதால் 3வது போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டார்.

சொதப்பிய தேர்வுக்குழு:
இங்கு தான் தேர்வுக்குழுவின் மிகப்பெரிய சொதப்பலான முடிவு அம்பலமாகிறது. ஏனெனில் அதிரடியாக நீக்கப்பட்ட ஆவேஷ் கானுக்கு பதிலாக தேர்வு செய்ய பெஞ்சில் எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் இல்லை. அதன் காரணமாக ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா 3வது வேகப்பந்து வீச்சாளராக செயல்படும் நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் ஆசிய கோப்பை அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு அதில் வெறும் 3 முழுநேர வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் தேர்வு செய்து தவறு செய்து விட்டதாக முன்னாள் இந்திய வீரர் சபா கரிம் குற்றம் சாட்டியுள்ளார்.

Deepak-Chahar

அந்த தவறை ஜடேஜா காயத்தால் வெளியேறியபோது சரி செய்ய பொன்னான வாய்ப்பு கிடைத்த போதிலும் அதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் முதல் வீரராக இடம்பிடித்துள்ள தீபக் சஹரை தேர்வு செய்யாமல் அக்சர் படேலை தேர்வு செய்து மீண்டும் தேர்வுக்குழு தவறு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏனெனில் ஏற்கனவே பெஞ்சில் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“முதலிரண்டு போட்டிகளில் வெற்றியின் தாக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் எந்தளவுக்கு செயல்பட்டார்கள் என்பதை நாம் பார்த்தோம். அந்த வகையில் தேர்வு குழுவினர் ஜடேஜாவுக்கு பதில் தீபக் சஹரை தேர்வு செய்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே 3 முழுநேர வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்திருந்தனர். அத்துடன் நாம் ஏற்கனவே 3 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்துள்ளோம். இது மாற்று வீரரை அறிவிக்கும்போது தேர்வுக்குழுவினர் சோம்பேறித்தனமாக அதிகம் சிந்திக்காமல் செயல்பட்டுள்ளதைக் காட்டுகிறது”

Karim

“அந்த வகையில் பெஞ்சில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் தயாராக இருக்கும் முடிவை எடுக்காமல் தேர்வுக்குழு தவறு செய்துள்ளது. அவர்கள் மட்டும் அதை சரியாக செய்திருந்தால் ஆவேஷ் கானை நீக்கும் போது மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை 11 பேர் அணியில் சேர்த்திருக்கலாம். மேலும் நேரடியாக 5 பந்துவீச்சாளர்களையும் பாண்டியாவை 6வது பந்துவீச்சாளராகவும் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. ஆனால் இங்கு பாண்டியாவை 5வது பந்து வீச்சாளராக பயன்படுத்தியுள்ளார்கள். இது காயத்திலிருந்து குணமடைந்த திரும்பிய பின் இதுவரை 5வது பந்து வீச்சாளராக செயல்படாத பாண்டியாவுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

அதே கருத்தை கூறியுள்ள விராட் கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் அந்த நிகழ்ச்சியில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஜடேஜாவின் மாற்று வீரராக அக்சர் பட்டேலுக்கு பதிலாக தீபக் சாஹர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டில் விக்கெட் எடுக்கும் ஸ்பெஷலிஸ்ட் பவுலர் ஆவார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் பந்தை ஸ்விங் செய்து ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை எடுப்பார். அவர் மட்டும் விளையாடியிருந்தால் பாகிஸ்தான் நிச்சயம் அந்தப் பெரிய ரன்களை சேசிங் செய்திருக்க முடியாது” என்று கூறினார்.

Advertisement