சென்னை ஒரு சிட்டி மட்டும் கிடையாது. அது ஒரு எமோஷன். சென்னை குறித்து நெகிழ்ந்த – சி.எஸ்.கே வீரர்

CSKShop

பல்வேறு இன்னல்களை கடந்து ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அடுத்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அண்மையில் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த சிஎஸ்கே அணி வீரர்கள் 5 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு துபாய் சென்றடைந்தனர்.

csk

சென்னை அணியின் கேப்டன் டோனி, ரெய்னா,ஜடேஜா உட்பட 16 சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அணி நிர்வாகிகள் 51 தனி விமானத்தில் துபாய் சென்றனர். அங்கு தற்போது ஸ்டார் ஹோட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு மீண்டும் பயிற்சியை துவங்குவார்கள்.

ஐபிஎல் என்றாலே சென்னை அணி வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் சொந்தமான இடமாக சேப்பாக்கம் மைதானம் களை கட்டி இருக்கும். ஆனால் இந்த முறை இப்போட்டிகள் இந்தியாவில் நடைபெற வில்லை என்பதால் சென்னை ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அதே போல சென்னை அணி வீரர்களும் சென்னையை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வாரம் தற்போது கொண்டாடப்படும் நிலையில் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் சென்னை நகரத்தின் மீதான காதலை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் கூறியதாவது : சென்னை எப்போது சென்றாலும் ஒரு வீட்டைப் போலவே இருக்கும். காரணம் சென்னையில் எங்களுக்கு கிடைக்கும் அன்பானது எங்க சொந்த ஊரில் கூட கிடைக்காது.

- Advertisement -

அந்த அளவிற்கு இங்கு கிடைக்கும் அன்பின் மதிப்பு அதிகம். ஐபிஎல் சென்னை வரும்போதெல்லாம் வீரர்கள் அன்பின் அரவணைப்பில் நனைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். தீபக் சாஹரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.