நான் ஏன் மாஸ்க் போடணும். தெனாவட்டாக நடந்துகொண்ட தீபக் சாகர்

chahar
- Advertisement -

கரோனா வைரஸ் அவர்களுக்கிடையே இந்த வருடம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இங்கே உயிர் பாதுகாப்பு சூழல் கொண்ட ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு அதற்காகத்தான். இந்த தொடர் நடத்தப்படுகிறது. ரசிகர்கள் இல்லாமல் ஒவ்வொரு போட்டியும் நடத்தப்படும்.

மேலும் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கு, வேலை ஆட்களுக்கும் பல விதி முறைகள் விதிக்கப்பட்டு அது சரியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் உட்பட ஊழியர்கள் வேலையாட்கள் என மொத்தம் பதிமூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் ஐபிஎல் நிர்வாகம் அதிர்ச்சியில் உள்ளது.

- Advertisement -

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. குறிப்பாக சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிக்கல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீபக் மற்றும் அவருடைய சகோதரர் ராகுல் சாகர் ஆகிய இருவருக்கும் இடையே ஒரு இன்ஸ்டாகிராம் உரையாடல் நடந்தது.

இந்த உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது இந்த உரையாடலின் படத்தில் சுரேஷ் ரெய்னா,கரண் சர்மா, பியூஷ் சாவ்லா ஆகியோர் உடன் இருக்கும் தீபக் சாகர் பதிவிட்டிருந்தார். அவரது தம்பி அண்ணா உங்கள் மாஸ் எங்கே? சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டாமா? என்று கேட்டிருந்தார்.

அதற்கு தீபக் சஹர் நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம் என்பதால் மாஸ்க் அணிய மாட்டோம் என்று தெரிவித்திருந்தார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் மெத்தனமாக இவர் செய்த இந்த செயல் தற்போது பெரிய பிரச்சனையை ஏற்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement