இந்திய அணியிலிருந்து வெளியேறிய ஆவேஷ் கானுக்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு – இனிமே இது தேவையா?

Rohit-and-Avesh
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய 15-வது ஆசியக்கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் தற்போது முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளான இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளானது “சூப்பர் 4” சுற்றில் விளையாடி வருகிறது. இந்த “சூப்பர் 4” சுற்றில் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த இந்திய அணியானது கிட்டத்தட்ட இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

IND vs SL

அதே வேளையில் இலங்கை அணியானது இரண்டு வெற்றிகளை பெற்று இறுதிப்போட்டியில் ஒரு கால் வைத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான அணி இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தானை வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளே இறுதிப்போட்டியில் விளையாடும். இதற்கு முன்னதாக இந்திய அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே இந்த ஆசிய கோப்பை தொடரில் எஞ்சியிருக்கிறது.

- Advertisement -

அதன்படி இந்திய அணியானது அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம்பெற்று விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் கடந்த சில தினங்களாகவே கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்தார். அதனை தொடர்ந்து நேற்று அவர் இந்த ஆசிய கோப்பை தொடரின் எஞ்சியுள்ள போட்டியில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக பி.சி.சி.ஐ அறிக்கை ஒன்றிணையும் வெளியிட்டிருந்தது.

Deepak-Chahar

இந்நிலையில் ஆவேஷ் கானுக்கு பதிலாக இந்த ஆசிய கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சாளர் தீபக்சாகர் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபக் சாகர் இந்த தொடரில் சேர்க்கப்பட்டது அருமையான விடயம் தான். ஆனாலும் இது மிகவும் காலம் கடந்து நிகழ்ந்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் சமீப காலமாகவே தொடர்ச்சியாக ரன்களை வாரி வழங்கி வரும் ஆவேஷ் கானுக்கு பதிலாக அவரை நேரடியாக அணியில் கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

- Advertisement -

ஆனால் கிட்டத்தட்ட தொடரானது முடிவடையும் வேளையில், இந்திய அணியும் கிட்டத்தட்ட இறுதிப்போட்டிக்கான வாய்ப்பினை இழந்துள்ள வேளையில் கடைசி ஒரு போட்டிக்கான இந்திய அணியில் தீபக் சாகரை சேர்த்தது தேவையில்லாத ஒன்று என்றும் இது இனியும் தேவைதானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs SL : எத்தனை பேர் வந்தாலும் தோனியாக முடியாது – ரிஷப் பண்ட் செயலால் ரசிகர்கள் சோகம், என்ன நடந்தது

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை முன்னணி வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்த தீபக் சாஹர் பவர்பிளே ஓவர்களிலேயே சிறப்பாக பந்து வீசி விக்கெட் எடுக்கும் திறமை கொண்டவர் ஆனால் அவரை விடுத்து ஆவேஷ் கானை இந்திய அணி இந்த ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்திருந்தது. ஆனால் ஆவேஷ் கான் இந்த தொடர் முழுவதுமே மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி பெரிய அளவு விமர்சனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement