ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த தீபக் சஹர் மும்பை அணிக்காக வாங்கப்பட்டார். ராஜஸ்தானை சேர்ந்த அவர் 2018 முதல் சென்னை அணிக்காக விளையாடி 2021, 2023 வருடங்களில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர்.
புதிய பந்தை ஸ்விங் செய்து பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை கொண்ட அவரை சென்னை அணி ஒருமுறை 14 கோடிக்கு போட்டியிட்டு வாங்கியது. ஆனால் அந்த வருடம் காயத்தால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாதது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமைந்தது. மேலும் சமீபத்திய வருடங்களில் அடிக்கடி காயத்தை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ள அவர் முழுமையாக விளையாட முடியாமல் தடுமாறுகிறார்.
மும்பையில் சஹர்:
அப்படி இருந்தும் அவரை ஏலத்தில் வாங்குவதற்கு சென்னை போட்டியிட்டது. ஆனால் அதற்கு போட்டியாக வந்த மும்பை 9.25 கோடிக்கு அவரை பஞ்சாப், சென்னை அணிகளுக்கு விட்டுக் கொடுக்காமல் வாங்கியது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தை விட மும்பையில் விளையாடுவது தம்மைப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்று தீபக் சஹர் தெரிவித்துள்ளார்.
மேலும் மும்பை அணிக்கு விளையாட செல்வதால் தோனியை நீங்கள் மிஸ் செய்வீர்களா என்று சுரேஷ் ரெய்னா கேட்டார். அதற்கு யார் தான் தோனியை மிஸ் செய்ய மாட்டார்கள் என்று அவர் அரை மனதுடன் ஏமாற்ற முகத்துடன் பதிலளித்தார். இது பற்றி சுரேஷ் ரெய்னாவிடம் ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
தோனியை மிஸ் செய்வேன்:
“ஒவ்வொரு முறையும் என்னுடைய தம்பி ராகுல் சஹாரியிடம் பேசுவேன். அப்போதெல்லாம் நம்முடைய திறன் அடிப்படையில் நீங்கள் விளையாடும் மும்பை அணிக்கு நான் விளையாட வேண்டும். நான் விளையாடும் சென்னை அணிக்கு நீங்கள் விளையாட வேண்டும் என்று அவர் அவரிடம் சொல்வேன். ஏனெனில் சென்னையில் ஸ்பின்னர்களுக்கு உதவி இருக்கும்”
இதையும் படிங்க: ஆர்.சி.பி அணியின் உயிரே நீங்கள் தான்.. நீங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி – முகமது சிராஜ் உருக்கம்
“மும்பையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும். அவரால் தற்போது சென்னைக்கு வர முடியாது. ஆனால் மும்பைக்கு விளையாட செல்கிறேன். எனவே அது எனக்கு சாதகமாக இருக்கும். தோனி பாயை யார் தான் மிஸ் செய்ய மாட்டார்கள்” என்று கூறினார். அந்த வகையில் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான சென்னை அணியில் விளையாடிய சஹர் அடுத்ததாக மற்றொரு வெற்றிகரமான மும்பை அணிக்காக விளையாட உள்ளது.



