காதலியை கரம் பிடித்த சிஎஸ்கே வீரர் – திருமணத்தால் மீண்டும் யோகம் வருமா? – விவரம் இதோ

Deepak Chahar Jaya Baradwaj
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன்சிப் பொறுப்பை ஒப்படைத்து திரும்ப வாங்கிய எம்எஸ் தோனியின் தவறான முடிவும் சுமாரான பேட்டிங் மோசமான பந்துவீச்சும் அந்த அணிக்கு மிகப்பெரிய தோல்வியை பரிசளித்தது. அதிலும் வரலாற்றில் முதல் முறையாக முதல் 4 போட்டிகளில் தோல்வியடைந்த அந்த அணி முதல் முறையாக ஒரு சீசனில் பங்கேற்ற 14 போட்டிகளில் 10 தோல்விகளை பதிவு செய்து மிகப்பெரிய அவமானத்தைச் சந்தித்தது.

அந்த அணியின் இந்த தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் காயத்தால் ஆரம்பத்திலேயே விலகியது முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் அவரைத் தவிர சென்னை அணியில் வேறு தரமான அனுபவமிக்க இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி தோல்வியை பரிசளித்தது. அதனால் சென்னை ரசிகர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட அவர் காயத்திலிருந்து குணமடையும் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

- Advertisement -

சஹருக்கு திருமணம்:
இந்நிலையில் காயத்தில் இருந்து ஓரளவு குணமடைந்துள்ள அவருக்கு நேற்று டெல்லியில் திருமணம் நடைபெற்று முடிந்தது. ஜெயா பரத்வாஜ் எனும் தனது நீண்டநாள் தோழியை காதலித்து வந்த அவர் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய போது ஒரு போட்டியின் முடிவில் மைதானத்தில் மோதிரத்தை நீட்டி தனது காதலை வெளிப்படையாக தெரிவித்தார். அதை அவரும் ஏற்றுக்கொண்டு கிரிக்கெட் களத்தில் இருவரும் ஒன்று சேர்ந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

அந்த நிலைமையில் நேற்று மே 1-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆக்ரா நகரில் அவரின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் அவரின் குடும்ப வழக்கப்படி மாப்பிள்ளை உடை அணிந்து குதிரையில் ஊர்வலமாக வந்து திருமணத்தில் பங்கேற்றார். நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் மிகவும் விமர்சையாக நடைபெற்ற அந்த திருமணத்தில் முக்கிய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்றதாக தெரிகிறது.

- Advertisement -

யோகம் வருமா:
குறிப்பாக தீபக் சஹர் சகோதரர் மற்றும் இளம் இந்திய வீரர் ராகுல் சஹார் கலந்து கொண்டு தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அவரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த திருமணத்திற்கு எம்எஸ் தோனி அழைக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் வாரிய விழாவில் பங்கேற்பதற்காக அவர் சென்றதால் பங்கு பெற முடியவில்லை. இருப்பினும் திருமணத்திற்கு பின்பு ஆக்ராவிலுள்ள ஜேபி பேலஸ் எனும் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வரவேற்பு விழாவில் எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மா உட்பட நிறைய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

பொதுவாக நிறைய ஆடவர்களின் வாழ்வில் மனைவி மற்றும் பெண் குழந்தைகள் வரும்போது கூடவே யோகமும் தேடிவரும் என்று கூறுவார்கள். குறிப்பாக பெண் குழந்தையை பெற்றெடுத்த பின் ரோகித் சர்மா அடுத்தடுத்து ஐபிஎல் கோப்பைகளை வென்று இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அந்த வகையில் தனது மனைவி வந்துள்ள நேரத்தில் வரும் காலங்களில் தீபக் சஹார் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு மீண்டும் விளையாடுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர் அடுத்ததாக உள்ளூர் போட்டிகளில் அல்லது அடுத்த வருட ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு ஏற்படும். ஏனென்றால் தற்போதைய ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா போன்ற மூத்த வீரர்களுடன் உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்துள்ளதால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகியுள்ளது.

இதையும் படிங்க : ஆர்சிபியை தோற்கடிக்கும் அணிகளுக்கு வரலாற்றில் இப்படி ஒரு சாபமா – ரசிகர்களை தெறிக்கவிடும் புள்ளிவிவரம்

எனவே அடுத்த ஒருசில மாதங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடிப்பதற்கு சாத்தியம் குறைவாகும். இருப்பினும் மனைவி வந்த யோகத்தில் எந்த அளவுக்கு கடினமாக உழைக்கிறாரோ அந்த அளவுக்கு அவரால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியும் என்று நம்பலாம்.

Advertisement