தெ.ஆ மண்ணில் சச்சினின் சாதனையை சமன் செய்த தீபக் சாகர் – இது தெரியுமா உங்களுக்கு?

Deepak-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் தென்னாப்பிரிக்க மண்ணில் சச்சின் சாதனை ஒன்றிணைந்து சமன் செய்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி கேப்டவுன் நகரில் நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணியானது 287 ரன்கள் குவிக்க அதனைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 283 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

இதன் காரணமாக வெற்றிக்கு மிக அருகில் வந்த இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 288 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது தவான் மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். பின்னர் மீண்டும் மிடில் ஆர்டரில் சறுக்கல் ஏற்பட ஏழாவது வீரராக பின்வரிசையில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் களமிறங்கினார்.

- Advertisement -

தான் களமிறங்கிய முதல் பந்தில் இருந்தே தென்னாப்பிரிக்க பவுலர்களை சரியாக எதிர்கொண்ட தீபக் சாகர் 34 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி 2 சிக்சர்கள் என 54 ரன்கள் எடுத்து அசத்தினார். ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடிய அவருக்கு பேட்டிங் திறன் உள்ளது என்பது மீண்டும் இந்த போட்டியில் தெரியவந்தது. அதேபோன்று பந்துவீச்சிலும் அசத்தியவர் 8 ஓவர்கள் பந்துவீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

இதன் மூலம் தற்போது தென்னாப்பிரிக்க மண்ணில் சச்சின் சாதனையை தீபக் சாகர் சமன் செய்துள்ளார். அதன்படி ஏற்கனவே தென்னாப்பிரிக்க மண்ணில் அரைசதம் அடித்தது மட்டுமின்றி அதே போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் திகழ்ந்தார். கடந்த 2003ஆம் ஆண்டு டர்பன் நகரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது 83 ரன்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கர் பந்துவீச்சிலும் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : வேற கிரகத்துல இருந்து வந்தவரு மாதிரி என்னமா பேட்டிங் பண்றாரு – இளம்வீரரை புகழ்ந்த தினேஷ் கார்த்திக்

அவரது இந்த சாதனையை தீபக் சாகர் கேப்டவுன் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 54 ரன்கள் அடித்தது மட்டுமின்றி 53 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சமன் செய்துள்ளார். அவரது இந்த ரெக்கார்ட் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement