சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேற்றப்படவுள்ள வீரர். அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பில்லை – விவரம் இதோ

CSK-1

நடப்பு ஐபிஎல் தொடரானது ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 27-வது லீக் போட்டியானது நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் பலம்வாய்ந்த இரு அணிகள் மோதிக் கொள்வதால், இப்போட்டியானது ரசிகர்கள் இடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

cskvsmi

இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயீன் அலி, டுயூப்ளசிஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரின் அதிரடி பேட்டிங்கினால் 218 ரன்கள் குவித்தது. 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், குவின்டன் டி காக்கும் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்த்த படியே இந்தப் போட்டியானது மிகவும் பரபரப்பாக சென்றது. கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன்கள் அடித்து அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்தார் அதிரடி ஆட்டக்காரரான கைரன் பொல்லார்ட். 34 பந்துகளை எதிர்கொண்ட அவர் 87 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

pollard

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பௌலிங் வீசிக்கொண்டிருந்த தீபக் சஹார், தான் வீசிய முதல் 2 ஓவர்கள் வரை மட்டுமே நல்ல உடல்நிலையுடன் பந்து வீசினார். ஆனால் மூன்றாவது ஓவர் வீசும்போது அவருக்கு வலது காலில் ஏதோ பிரச்சனை இருந்ததால் பந்து வீசவே சிரமப்பட்டார். அவரால் எப்போதும் வீசும் லைன் அன்ட் லெந்த் பந்துகளை வீச முடியவில்லை. இருப்பினும் அவருக்கு தொடர்ந்து பந்துவீச வாய்பளித்துக் கொண்டிருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோணி.

- Advertisement -

7 ஓவர்கள் முடிவுற்ற நிலையிலேயே தீபக் சஹார் தனது 4 ஓவர்களை வீசிவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக மீதமிருந்த 13 ஓவர்களும் கிருஷ்ணப்பா கௌதம் பீல்டிங் செய்யும் நிலமை ஏற்பட்டது. இதற்கிடையில் போட்டியின் பாதியிலேயே வெளியேறிய தீபக் சஹாருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

chahar

ஆனால் மீதமிருந்த ஓவர்களில் அவர் பீல்டிங் செய்ய வராததைப் பார்க்கும்போது அவருக்கு ஏதோ உடலில் பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. எனவே அடுத்து வரும் போட்டியில் தீபக் சஹார் சென்னை அணிக்காக விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடரில் 7 போட்டிகளில் பந்து வீசிய அவர் 8 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.