வீடியோ : தீபக் சாகர் போட்ட பிரமாண்ட வொயிட். கீப்பரையும் தாண்டி 1st ஸ்லிப்பிற்கு சென்ற பந்து (வைரலாகும் வீடியோ)

chahar

ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி துவக்க வீரராக களமிறங்கிய பேர்ஸ்டோ 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க வார்னர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர்.

warner 1

இருப்பினும் வார்னர் மிகவும் பொறுமையான இன்னிங்சை விளையாடினார். 55 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 57 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது அவர்களது அணிக்கு பெரிய பாதகமாக அமைந்தது. இறுதியில் பாண்டே 61 ரன்கள், வில்லியம்சன் 26 ரன்கள் மற்றும் ஜாதவ் 12 ரன்கள் என இறுதி நேரத்தில் அதிரடி காட்ட 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்களை குவித்தனர்.

பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி துவக்கம் முதலே சிறப்பாக ஆடி எளிதாக வெற்றிக்கு சென்றது. சி.எஸ்.கே அணி முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தது. அதன்பிறகு 18-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து எளிதாக சேசிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

faf 1

துவக்க வீரர்களான கெய்க்வாட் 75 ரன்களும், டூபிளெஸ்ஸிஸ் 56 ரன்களும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் சி.எஸ்.கே தங்களது ஐந்தாவது வெற்றியை பெற்று பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மைதானத்தில் அதிக அளவு ஸ்விங் இருந்ததால் தீபக் சாஹர் பெரிய அளவில் பந்தை ஸ்விங் செய்து வீசிக்கொண்டிருந்தார். சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது வார்னர்க்கு எதிராக ஒரு பந்தினை தீபக் சாகர் ஸ்விங் செய்து வீசினார்.

- Advertisement -

அந்த பந்து பேட்ஸ்மேனை கடந்தது மட்டுமின்றி விக்கெட் கீப்பர் பிடிக்க முடியாத அளவிற்கு ஸ்விங் ஆகி பஸ்ட் ஸ்லிப் வரை சென்றது. அவர் வீசிய இந்த பிரம்மாண்ட வொயிட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ :