மீண்டும் சி.எஸ்.கே அணியின் பயிற்சியில் இணைந்த நம்பிக்கை நச்சத்திரம் – ஒரு வழியா பிரச்சனை தீர்ந்தது

CSK

இந்த வருட ஐபிஎல் தொடர் குறித்த பேச்சு துவங்கியதில் இருந்தே சிஎஸ்கே அணிக்கு பிரச்சினைகளுக்கும் மேல் பிரச்சினை இருந்து கொண்டே தான் வருகிறது. அந்த வகையில் சிஎஸ்கே எனக்கு பெரிய பிரச்சினையாக அமைந்தது யாதெனில் 13 பேருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புதான். இதனால் இத்தொடரில் சிஎஸ்கே அணி நீடிக்குமா ? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அந்த 13 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அதிலிருந்து முக்கிய வீரர் மீண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் தற்போது கொரோனா வைரஸில் இருந்து மீண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருந்த பயிற்சி கொரோனா பாதிப்பின் காரணமாக செப்டம்பர் 4 ஆம் தேதியே துவங்கியது. இதிலும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கலந்து கொள்ளவில்லை இந்நிலையில் தற்போது 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு இரண்டு முறை மேற்கொண்ட கொரோனா பரிசோதனைகளின் முடிவின் படி கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார்.

அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்த காரணத்தினால் தற்போது நேற்று மீண்டும் அணியுடன் இணைந்து வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பலமான விடயமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் சி.எஸ்.கே பந்துவீச்சாளர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயகரமான பந்துவீச்சாளராக இவர் சிஎஸ்கே அணிக்கு வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

deepak

இதனால் சிஎஸ்கே நிர்வாகம் தற்போது மகிழ்ச்சியும் உள்ளது. இந்த தகவலை சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசிவிஸ்வநாதன் அதிகாரப்பூர்வமாக நேற்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் உள்ளார். அதில் அவர் தீபக் சாஹர் குறித்து கூறுகையில் : கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த தீபக் சாகர் தற்போது குணம் அடைந்துள்ளார். 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நேரத்திற்கு பிறகு இரு முறை கொரோனா பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

deepak

அந்த சோதனையில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்திருப்பதால் அவர் நேற்றிலிருந்து அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட தொடங்கி உள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வீரரான ருதுராஜ் இன்னும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார் அவரது உடல்நிலை குறித்து தகவல் சில தினங்களில் வெளியிடப்படும் என்றும் காசிவிஸ்வநாதன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.