IPL 2023 : அதிக விலைக்கு வாங்கப்பட்ட 2 சி.எஸ்.கே வீரர்கள் தற்காலிக விலகல் – இதுக்கு அவங்கள வாங்காமலே இருந்திருக்கலாம்

CSK-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த மார்ச் 31-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஒரு வாரம் கடந்த நிலையில் இன்றளவும் வீரர்கள் காயம் காரணமாக விலகி வருவது தொடர்கதை ஆகியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு அணிகளை சேர்ந்த பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியது அந்தந்த அணிகளுக்கு பின்னைடைவை தந்துள்ளது.

CSK vs LSG

- Advertisement -

இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியில் இருந்தும் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளது நமது அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. அந்த வகையில் கடந்த ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் கடைசியாக நடைபெற்ற போட்டியில் விளையாட முடியாமல் போனது.

அதேபோன்று அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட தீபக் சாகரும் கடந்த போட்டியின் முதல் ஓவரை வீசிவிட்டு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இப்படி அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டு வீரர்களும் சிஎஸ்கே அணியிலிருந்து விலகி இருப்பது தற்போது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Deepak-Chahar

அவர்கள் இருவரது காயம் குறித்தும் பரிசீலித்த அணியின் மருத்துவர்கள் ஸ்கேன் பரிசோதனைக்கு பிறகே எதையும் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் போட்டிகளில் அவர்கள் இருவரும் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : IPL 2023 : ஐ.பி.எல் வரலாற்றின் மோசமான சாதனையை பதிவுசெய்த குஜராத் பவுலர் – ரிங்கு சிங் தான் எல்லாத்துக்கும் காரணம்

தற்போது 41 வயதினை எட்டியுள்ள சென்னை அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி ஐ.பி.எல் தொடராக இருக்கும் என்பதனால் இந்த சீசனில் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதேபோன்று இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement