- Advertisement -

4 ஆவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா கண்டிப்பா ஆடனும்.. காரணத்தை கூறிய – தீப்தாஸ் குப்தா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்த தொடரில் இங்கிலாந்து அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்க இருக்கிறது.

அடுத்த போட்டியில் பும்ரா கண்டிப்பா ஆடனும் : தீப் தாஸ்குப்தா

இந்த நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதனால் அடுத்த நான்காவது டெஸ்ட் போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. எனவே அந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு தற்போது இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா கட்டாயம் விளையாட வேண்டும் என்ற கருத்துக்களை பலரும் தெரிவித்து இருக்கின்றனர். ஏனெனில் இந்த இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ரா பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதனால் அடுத்து இரண்டு போட்டிகளில் எந்த போட்டியில் அவர் விளையாட இருக்கிறார்? என்பது இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. ஆனால் நான்காவது போட்டியில் அவர் விளையாடினால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதனால் அவரது இடம் நான்காவது போட்டிக்கு மிக முக்கியமாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப் தாஸ்குப்தா கூறுகையில் :

- Advertisement -

என்னை பொறுத்தவரை நான்காவது போட்டியில் பும்ரா விளையாடியாக வேண்டும். ஏனெனில் உலகின் நம்பர் 1 பவுலரான அவர் விளையாடினால்தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சதவீதமும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க : கோலி மாதிரி நினைச்சுகிட்டு.. இங்கிலாந்து மிருகத்தை தட்டி எழுப்பிய அவரை விமர்சிக்காதீங்க.. மொய்ன் அலி

இவ்வேளையில் இந்த தொடரை இந்திய அணி சமன் செய்ய பும்ராவின் பங்களிப்பு முக்கியமானது. அதோடு மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 14-ஆம் தேதி முடிவடைந்த வேளையில் அடுத்த போட்டி ஜூலை 23-ஆம் தேதி தான் நடைபெற உள்ளது. இதனால் இதற்கு இடைப்பட்ட ஓய்வு நாட்கள் அவருக்கு போதுமானதாக இருக்கும் என்று தான் கருதுவதாக தீப் தாஸ்குப்தா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -