இங்கவே லேட் ஆய்டும். அப்புறம் இவங்க 2 பேரையும் எதுக்கு இங்கிலாந்து அனுப்பனும் – தீப்தாஸ் குப்தா கேள்வி

gupta
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. மேலும் இந்த தொடரிலும் தோல்வி அடையும் பட்சத்தில் இந்திய அணி பெரிய விமர்சனத்தை சந்திக்கும் என்பதால் இந்த தொடரில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் விளையாட இருந்த சுப்மன் கில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று கூறப்பட்டதால் அவருக்கு பதிலாக மாற்று வீரர்களாக இலங்கை தொடருக்காக சென்றுள்ள பிரித்வி ஷா மற்றும் படிக்கல் ஆகியோரை இங்கிலாந்துக்கு அனுப்புமாறு இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்கனவே நிராகரித்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான தீப்தாஸ் குப்தா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஏற்கனவே இலங்கை தொடரில் தற்போது தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த ஒரு வார காலமாக இந்திய தொடக்க வீரர்களை இங்கிலாந்து அனுப்புவது குறித்த பேச்சு தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Shaw

ஆனாலும் இலங்கை தொடர் 29ஆம் தேதி வரை நடைபெறுவதால் அங்கிருந்து 30ஆம் தேதி அவர்கள் இங்கிலாந்துக்குப் புறப்பட்டாலும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் அதுமட்டுமின்றி இங்கு அவர்கள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி விட்டு செல்வதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் உடனடியாக அவர்களால் விளையாட முடியாது. அதற்கு ஒரு வாரம் பயிற்சி தேவை எனவே மொத்தத்தில் 20 நாட்கள் வீணாகிவிடும். அதன் பிறகு கடைசி இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர்களால் விளையாட முடியும்.

Shaw

அப்படி இரண்டு போட்டிகளுக்காக அவர்களை அனுப்புவதை விட அங்கிருக்கும் துவக்க வீரர்களை வைத்து விளையாடலாம். குறிப்பாக இந்திய அணியில் மாயங்க் அகர்வால், ராகுல் ஆகியோர் துவக்க வீரருக்கான இடத்திற்கு காத்திருக்கின்றனர். எனவே அவர்களில் ஒருவரை ரோகித் சர்மாவுடன் வைத்து இந்த தொடரில் விளையாடலாம் என தீப்தாஸ் குப்தா தனது கருத்தினை வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement