இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் என்ற 2 – 1* கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதைத்தொடர்ந்து 4வது போட்டி டிசம்பர் 17ஆம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியிலாவது இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஃபார்முக்கு வருவார்களா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஏனெனில் கேப்டனாக பொறுப்பேற்றது முதலே தடுமாற்றமாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் இந்த வருடம் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. அதே போல வலுக்கட்டாயமாக துணை கேப்டனாக வளர்க்கப்படும் சுப்மன் கில் கடைசி 18 டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும் துணை கேப்டன் என்பதற்காக மட்டும் வாய்ப்புகளைப் பெறும் அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள்.
கில்லை திட்டாதீங்க:
மொத்தத்தில் 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் அவர்களுடைய ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் விராட் கோலியை போல சுப்மன் கில் ஒருபுறம் விக்கெட்டை விடாமல் நங்கூரமாக விளையாடுவதாக முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார். அதைப் பயன்படுத்தி எதிர்புறம் வரும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
எனவே சுப்மன் கில்லை திட்ட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கும் அவர் டி20 உலகக் கோப்பைக்கு முன் சூரியகுமாரும் ஃபார்முக்கு வந்து விடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி குப்தா பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை சுப்மன் கில் வேலை மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் மற்ற பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்”
ஃபார்முக்கு வந்துருவாங்க:
“மறுபுறம் அவர் விராட் கோலி செய்யக்கூடிய வேலையை செய்கிறார். அதாவது ஒருபுறம் விராட் கோலி நங்கூரமாக விளையாடுவார். அவரைச் சுற்றி மற்றவர்கள் அதிரடியாக விளையாடுவார்கள். அந்த வகையில் விராட் கோலி விளையாடுவது போல் சுப்மன் வேலை செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவரை சுற்றி அனைவரும் விளையாடுகிறார்கள். அவர் மற்றவர்களைப் போல அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடாவிட்டாலும் மற்றவர்களை காட்டிலும் நிலையாக விளையாடுகிறார்”
இதையும் படிங்க: அர்ஷ்தீப் சிங் இருப்பதால் இந்திய அணியில் என்னுடைய இந்த வேலை ஈஸியா இருக்கு – ஹர்ஷித் ராணா ஹேப்பி
“டி20 உலகக் கோப்பைக்கு முன் நமக்கு அதிகமான போட்டிகள் இல்லை. எனவே சுப்மன் கில், சூரியகுமார் மீண்டும் நெருப்பாக விளையாடுவதை நீங்கள் பார்க்க விரும்புவீர்கள். இருப்பினும் அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனிக் போதுமான திறமைக் கொண்ட அவர்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்து விடுவார்கள்” என்று கூறினார்.



