அர்ஷ்தீப் சிங் இருப்பதால் இந்திய அணியில் என்னுடைய இந்த வேலை ஈஸியா இருக்கு – ஹர்ஷித் ராணா ஹேப்பி

Harshit Rana
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடாத நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது ஜஸ்ப்ரீத் பும்ரா தனிப்பட்ட காரணங்களால் விலகியதால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார்.

அர்ஷ்தீப் சிங் விளையாடுவதால் எனக்கு உதவியாக இருக்கிறது : ஹர்ஷித் ராணா

அப்படி தனக்கு கிடைக்க வாய்ப்பில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் நான்கு ஓவர்கள் பந்து வீசி 34 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்திய அணிக்காக மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடி வரும் அடுத்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராகவும் பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து விளையாடியாது குறித்து பேசி இருக்கும் ஹர்ஷித் ராணா தன்னுடைய பவுலிங்கிற்கு அர்ஷ்தீப் சிங் உறுதுணையாக இருப்பது பலம் அளிப்பதாக பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

போட்டியின் ஆரம்பத்திலேயே புது பந்தில் பந்து வீசுவதை நான் மிகவும் விரும்புகிறேன். ஒரு முனையில் அர்ஷ்தீப் சிங் போன்ற ஒரு சிறப்பான பந்து வீச்சாளர் எப்போதும் எதிரணிகளுக்கு அழுத்தத்தை உருவாக்குவார். அவர் எதிரணிக்கு கொடுக்கும் அழுத்தம் காரணமாக என்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

அவர் ஒரு ஓவரை வீசிய பின்னர் நான் ஒரு ஓவரை வீசும் போது எனக்கு விக்கெட்டுகளும் எளிதாக கிடைக்கின்றன. தரம்சாலா மைதானத்தில் இதுவரை நான் பந்துவீசியது கிடையாது. இதற்கு முன்பு இங்கு விளையாடாத நான் தற்போது முதல் போட்டியில் இங்கு விளையாடியது வேடிக்கையாக இருக்கிறது. இந்த மைதானத்தின் சூழலும், வானிலையும் என்னுடைய பந்துவீச்சுக்கு உதவியது என்றும் ஹர்ஷித் ராணா குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பையை இந்திய அணி வென்றால் 2 வரலாற்று சாதனையை நிகழ்த்த வாய்ப்பு – விவரம் இதோ

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது டி20 போட்டியானது நாளை டிசமபர் 17-ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடைபெறயிருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement