டி20 உலககோப்பை அணியில் தமிழக வீரரான இவரே ஸ்பின்னருக்கான முதல் தேர்வாக இருப்பார் – தீப்தாஸ் குப்தா

Deepdas-gupta

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடருக்கு பிறகு அடுத்த சில நாட்களில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியும் இம்மாதத் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள பலர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் சிலர் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

IND

அந்த வகையில் தற்போது டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களில் ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து இந்திய அணிக்காக முதன்மைச் ஸ்பின்னராக தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி தான் தேர்வாவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை இந்திய அணியில் பிளேயிங் லெவனில் ஜடேஜா ஆல்-ரவுண்டராக இடம் பெறுவார்.

- Advertisement -

அவரைத் தொடர்ந்து மற்றொரு ஸ்பின்னராக நிச்சயம் எனது முதல் தேர்வாக வருண் சக்கரவர்த்தி தான் இருப்பார். ஏனெனில் தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் 5 சுழற்பந்துவீச்சாளர்களில் இவர் அபாரமான திறமை கொண்டவர். ஒரு ஓவரில் 6 பந்துகளையும் 6 வெவ்வேறு விதமாக வீசும் இவர் நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் அளிக்கும் வகையில் பந்து வீசுவார் என்று தோன்றுகிறது.

varun 2

அது மட்டுமின்றி அவரது பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எளிதில் கணிக்க முடியாது என்பதால் இவர் ஒரு விக்கெட் டேக்கராக இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : தற்போதைக்கு அவருக்குள்ள ஒரே ஒரு கஷ்டம் யாதெனில் அவர் உடற்பகுதியில் சற்று கடினப்பட்டு வருவதாகத் தோன்றுகிறது.

- Advertisement -

Varun

ஏனெனில் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக அவர் தோள்பட்டை பகுதியிலும் மற்றும் கணுக் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். அதை மட்டும் அவர் சரி செய்து கொண்டால் நிச்சயம் இந்த உலக கோப்பை தொடரில் அவர் விளையாடுவது உறுதி என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வெற்றி கைக்கு அருகில் வந்தபோது வில்லனாக மாறிய 9 கோடி ஆல்ரவுண்டர் – சி.எஸ்.கே தோக்க இவரே காரணம்

அவர் கூறியதற்கு ஏற்றார்போல் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 6.73 என்கிற விகிதத்தில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி வருன் சக்ரவர்த்தி விக்கெட்டுகள் எல்லாம் பெரிய பெரிய வீரர்களின் விக்கெட்டுகள் என்பதால் நிச்சயம் இந்த டி20 உலக கோப்பை தொடரில் அவர் தனது பவுலிங்கின் மூலம் ஆதிக்கம் செலுத்துவார் என்று தெரிகிறது.

Advertisement