சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐசிசி பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி நான்கு லீக் சுற்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.
அக்சர் படேல் வாஷிங்டன் சுந்தர் இருவரில் யார் ஆடனும்? : தீப்தாஸ் குப்தா
அதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை எதிர்த்து விளையாட காத்திருக்கிறது. அதில் முதல் ஆட்டமாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் விளையாடியிருந்த வேளையில் மீண்டும் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டியில் அக்சர் பட்டேல் அந்த இடத்திற்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேல் விளையாட வேண்டுமா? அல்லது வாஷிங்டன் சுந்தர் விளையாட வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான தீப் தாஸ்குப்தா கூறுகையில் :
சூப்பர் 8 சுற்று போட்டியில் நிச்சயம் அக்சர் பட்டேல் தான் விளையாட வேண்டும். ஏனெனில் அவர் துணை கேப்டனாக இருப்பதோடு மட்டுமின்றி முதன்மை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படுகிறார். ஒருவேளை மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அர்ஷ்தீப் சிங் வெளியேறினால் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறலாமே தவிர அக்சர் பட்டேலை நீக்கிவிட்டு வாஷிங்டன் சுந்தரை சேர்ப்பது சரியாக இருக்காது.
இதையும் படிங்க : கடந்த ஒரு வருஷத்துல ஷிவம் துபே இந்த விடயத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கார் – அபிஷேக் நாயர் பாராட்டு
இருந்தாலும் இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இணைந்து விளையாடினால் ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஒரு நல்ல சூழல் ஏற்படும். ஏனெனில் ஆரம்பகட்ட ஓவர்களை அர்ஷ்தீப் சிங் வீசும் போது பும்ரா எங்கு வேண்டுமானாலும் தேவைப்படும் இடத்தில் பந்துவீசலாம் என தீப்தாஸ் குப்தா கூறியது குறிப்பிடத்தக்கது.



