இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே தற்போது நடைபெற்று வரும் 2026 உலகக்கோப்பை தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிகளில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். அதிலும் குறிப்பாக நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் அரைசதம் அடித்த அவர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார்.
ஷிவம் துபேவை பாராட்டி பேசிய : அபிஷேக் நாயர்
அவரது பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே சிறப்பாக இருக்கும் நிலையில் இந்த தொடரில் அவர் ஒரு மதிப்பு மிக்க பங்கினை இந்திய அணிக்கு வழங்குவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஷிவம் துபேவின் பந்துவீச்சு செயல்பாடு இந்த டி20 உலக கோப்பை தொடர் மட்டுமின்றி கடந்த ஓராண்டாக சிறப்பாக இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அபிஷேக் ஷர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : பலரும் ஷிவம் துபேவை மித வேகப்பந்து வீச்சாளர் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் தற்போது அவர் 130-131 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். இந்த உலகக்கோப்பை தொடர் மட்டுமின்றி கடந்த ஓராண்டாகவே அவர் இந்திய அணி எப்போதெல்லாம் சவாலான சூழலை சந்திக்கிறதோ அப்போதெல்லாம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறையிலுமே கைகொடுத்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக கடந்த ஓராண்டாக புதுப்பந்தில் பந்துவீசி வருகிறார். இதனால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கான அழுத்தமும் குறைகிறது. பந்துவீச்சில் நிறைய கடின உழைப்பை அவர் வெளிப்படுத்தியதால் அவரது பந்துவீச்சும் தற்போது மெருகேறி இருக்கிறது. தனது உடல் எடையை குறைத்த அவர் மிக வலிமையான வீரராக மாறியுள்ளதால் அவருடைய பந்துவீச்சின் வேகமும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா 5 ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய இதுதான் காரணம் – முகமது கைப் கருத்து
தற்போதைய நிலையில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்று அவரை சொல்வதற்கு சரியான ஒன்றாக இருக்கும் என்று தான் கருதுவதாகவும் அபிஷேக் நாயர் கூறியுள்ளார். அதேபோன்று முதல் 10 பந்துகளில் அவர் இரண்டு ரன்கள் எடுத்திருந்தாலும் அதன்பின்னர் பெரிய பெரிய ஷாட்களை விளையாடி அதிரடியான ரன் குவிப்பினை வழங்கும் வித்தையும் கத்து வைத்திருக்கிறார் என அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.



