பி.சி.சி.ஐ – யால் தவறுதலாக வெளியேற்றப்பட்ட ஐ.பி.எல் அணி. 4800 கோடி இழப்பீடு கொடுக்க உத்தரவு – வெளியான ஷாக்கிங் நியூஸ்

IPL-1
- Advertisement -

ஆரம்ப காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் ஆடிய அந்த அணி டெக்கான் சார்ஜர்ஸ். 2008 முதல் 2012 ஆம் ஆண்டு வரை இந்த அணி ஐபிஎல் தொடரில் விளையாடியது. மேலும் 2009ம் ஆண்டு பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றது. பின்னர் 2012ஆம் ஆண்டு இதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

DC

- Advertisement -

அதாவது பிசிசிஐ-க்கு உத்தரவாத தொகையாக அந்த வருடம் 100 கோடி தொகையை செலுத்தவில்லை. இதன் காரணமாக பிசிசிஐ தனது உரிமத்தை ரத்து செய்தது. கடுப்பான டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகம் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தனி நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைத்து விசாரிக்கப்பட்டது.

தற்போது ஏழு வருடங்கள் கழித்து இந்த வழக்கிற்கான தீர்ப்பு வந்துள்ளது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் மதிப்பு தற்போது 4,800 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிசிசிஐ எடுத்த முடிவு சட்டத்திற்குப் புறம்பானது. சட்டத்திற்குப் புறம்பாக இது செய்யப்பட்டதால் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு 4,800 கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

DC 1

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பிசிசிஐ மேல்முறையீடு செய்யும் என்று தெரிகிறது. இதேபோன்று மற்றொரு வழக்கில் 2017 ஆம் ஆண்டு கொச்சி அணிக்கு 850 கோடி ரூபாய் இழப்பு வழங்க வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தொகையை இன்னும் பிசிசிஐ கொச்சி அணிக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BCCI

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் திட்டமிட்டபடி இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெறவில்லை என்றால் 4500 கோடி ருபாய் வரை இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement