ஆஸ்திரேலியாவில் முடியலனா என்ன ? இந்த நாட்டுல டி20 உலகக்கோப்பை நடத்தலாமே – டீன் ஜோன்ஸ் யோசனை

- Advertisement -

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கிரிக்கெட் போட்டிகளும் உலகம் முழுவதும் தற்போது இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெறாமல் உள்ளது. மேலும் எத்தனை மாதங்கள் இதே நிலைமை நீடிக்கும் என்பது குறித்தும் தெளிவான தகவலும் இதுவரை இல்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை தொடர் குறித்த தகவலும் இதுவரை நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள இந்த t20 உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் திட்டமிட்டபடி இந்த தொடர் நடைபெறுமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கொரோனா தீவிரம் காரணமாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுவது சந்தேகமே என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பையை திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து ஐசிசி நிர்வாக குழு ஆலோசனை நடத்த உள்ளது.

Cup

இந்த ஆலோசனை கூட்டம் 28ஆம் தேதி கூடி முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை நடத்த முடியாமல் போனால் நிச்சயம் 2022ஆம் ஆண்டு தான் உலக கோப்பை தொடர் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு ஐசிசி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் : நியூசிலாந்தில் கடந்த 12 நாட்களாக கொரோனா வைரசால் யாரும் பாதிப்படையவில்லை மேலும் நியூஸிலாந்தில் பாதிப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது. அவர்கள் அதிலிருந்து எளிதில் வெளிவந்துவிட முடியும். எனவே நியூசிலாந்தில் அடுத்த வாரம் முதல் எச்சரிக்கை வழிமுறை 1 க்கு மாறலாம் என்று நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

INDvsNZ

இதனால் நாம் டி20 உலகக் கோப்பையை நியூசிலாந்தில் விளையாடலாமா ? என்று அவர் கேட்டுள்ளார் மேலும் இதைத்தான் ஒரு யோசனையாக தான் சொல்வதாகும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் கூறியபடி நியூசிலாந்தில் உலக கோப்பை தொடர் நடைபெற்றாலும் வீரர்களின் பயணம், பாதுகாப்பு போன்ற பல சிக்கல்கள் உள்ளதால் இந்த யோசனை எந்த அளவிற்கு பலன் தரும் என்பதும் சந்தேகம்தான்.

Advertisement