யூ.ஏ.இ யில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் தொடர் நிச்சயம் இவங்களுக்கு சாதகமாக அமையும் – டீன் ஜோன்ஸ் கணிப்பு

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் 3 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை துபாய், சார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் ஐபிஎல் தொடரின் 60 போட்டிகளும் நடைபெற இருக்கிறது.

ipl

- Advertisement -

இந்த இடங்களில் தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் அவ்வப்போது நடைபெறும். இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளுக்கு வர்ணனை செய்த ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் இந்த மைதானங்களில் தன்மை பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில் ..

அபுதாபி, துபாய்,சார்ஜா ஆகிய மைதானங்களில் ஐபிஎல் தொடர் நடை பெறுவது உறுதியாகி உள்ளது. நான் இந்த மைதானங்களில் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது பயிற்சியாளராகவும், வர்ணனையாளராக இருந்திருக்கிறேன். அதனால் இந்த மைதானங்களை பற்றி சற்று நன்றாக தெரிந்து வைத்துள்ளேன்.

Bowlers-ipl

இந்த மூன்று மைதானங்களும் வெவ்வேறு தன்மைகள் கொண்டது. ஐபிஎல் தொடர் துவங்கும் போது நன்றாக இருக்கும். 60 போட்டிகள் மேல் இந்த மூன்று மைதானங்களில் நடைபெறுவதால் கடைசிகட்ட போட்டிகளின்போது மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறி விடும். இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்களின் கை ஓங்கிவிடும்.

நிச்சயம் எந்த அணி நல்ல சுழற்பந்து வீச்சை வைத்திருக்கிறதோ அந்த அணிதான் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார் டீன் ஜோன்ஸ். இந்திய மைதானங்களில் சுழற்பந்துவீச்சு கட்டாயம் கைகொடுத்து வருகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் எந்த அளவிற்கு ஒத்துழைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement