தோனி பயன்படுத்தும் கேப்டன்ஷிப் முறை ரொம்ப பழசு. ஆனாலும் சூப்பரா பண்றாரு – டீன் ஜோன்ஸ் புகழாரம்

Jones
- Advertisement -

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதன் காரணமாக ஐபிஎல் தொடரில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து வைப்பார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர். கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் பைனலில் போட்டியில் விளையாடியவர் தோனி.

Dhoni

அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. நேராக ஒன்றரை வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரில் களமிறங்கப் போகிறார். இதன் காரணமாக அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .வரும் சனிக்கிழமை முதல் துவங்கும் போது உள்ள முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.

- Advertisement -

சென்னை அணியின் முக்கியமான சில வீரர்கள் இல்லை இந்த நேரத்தில் அணியை எப்படி வழி நடத்தப் போகிறார் என்பது குறித்து அனைவரும் பார்க்க ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில், வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தோனியின் அணுகுமுறை குறித்து பேசியிருக்கிறார். மேலும், அவரது அணுகுமுறை மிகவும் பழமை வாய்ந்த அணுகுமுறை என்றும் தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில்…

Dhoni

தோனியை கேப்டன் கூல் என்று அழைப்பதுதான் சரியான ஒரு சொற்றொடர். கடந்த 14 மாதங்களாக அவர் கிரிக்கெட் விளையாட வில்லை தற்போது சென்னை அணிக்காக ஆடப்போகிறார். மேலும், அவர் கேப்டனாக இருக்கும் போது அவரது அணுகுமுறை உலகின் பழமைவாய்ந்த அணுகுமுறையாக இருந்திருக்கிறது.

CskvsMi

எதிரணியினர் தவறு செய்யும் வரைக் காத்திருப்பார். அந்த தவறை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வெற்றியை தன் பக்கம் வரவழைப்பார். இதுதான் அவரது அணுகுமுறை இந்தியாவின் மிகச்சிறந்த டாப் 5 வீரர்களில் இவரும் ஒருவர் என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement