ஐ.பி.எல் வர்ணனைக்காக மும்பை வந்திருந்த பிரபல வர்ணனையாளர் மாரடைப்பால் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

Jones
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் கடந்த 20 வருடங்களாக பிரபல வர்ணனையாளராகவும் இருந்து வந்த டீன் ஜோன்ஸ் நேற்று முன்தினம் மும்பையில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். இந்தியாவில் ஐ.பி.எல் தொடருக்காக வந்து தற்போது வர்ணனை செய்து கொண்டிருந்த ஜோன்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் Dug out நேரலை குழுவில் மிக முக்கியமான நபராக இருந்தவர் டீன் ஜோன்ஸ்.

இந்தக் குழுதான் ஐபிஎல் தொடரில் டெக்னிக்கலாக இருக்கும் பல்வேறு புள்ளிவிவரங்களை ரசிகர்களுக்கு வர்ணனையை மூலமாக எடுத்துரைக்கும் குழுவாக இருந்தது. தற்போது நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் உணவு அருந்திவிட்டு ஓய்வு எடுப்பதற்காக தனது அறைக்கு சென்றுள்ளார். சில மணி நேரங்கள் ஆகியும் அவர் வெளியே வரவே இல்லை சென்று பார்த்தால் அவர் மயக்கமான நிலையில் இருந்திருக்கிறார்

- Advertisement -

உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். அப்போது மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும், ஹார்ட் அட்டாக் காரணமாகத்தான் அவர் உயிரிழந்தார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jones-1

மேலும் நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விளையாடினர். தற்போது அனைவரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் கௌதம் கம்பீர் மற்றும் முன்னாள் இந்திய அணி வீரர்களும் இவருடன் சேர்ந்து வேலை செய்தவர்கள்.

2019 ஆம் ஆகவே இவர்கள் அனைவரும் மீளா துயரத்தில் இருக்கின்றனர். 2020 ஆம் ஆண்டு இவ்வாறு பல பிரபலங்கள் இயற்கையாக உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement