ராஞ்சி நகரில் எதுமே சரியில்லை. அப்புறம் எப்படி இங்கு விளையாடுறது – எல்கர் நக்கல்

Elgar-2
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Elgar 1

- Advertisement -

அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாலோ ஆன் கொடுக்க மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் தென்னாபிரிக்க அணி 203 ரன்கள் பின் நிலையில் உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் டீன் எல்கர் ராஞ்சி நகர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தனியாளாக ராஞ்சி போன்ற சின்ன ஊருக்கு வரும்போது வீரர்களுக்கு பல விஷயங்கள் தெரியவரும். ஹோட்டல்கள் இங்கு சிறப்பாக இல்லை ஆரோக்கியமான உணவுகளும் கிடைப்பது மிக சவாலாக உள்ளது. மேலும் இந்தியா வரும் போது இதெல்லாம் பெரிய பாடம் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என்று எல்கர் கூறினார்.

Elgar

இதனை கண்ட இந்தி ரசிகர்கள் ஜோகன்னஸ்பர்க் சென்றபோது அங்கு நிலவிய தண்ணீர் பஞ்சத்தில் இரண்டு நிமிடத்துக்கு மேல் வீரர்கள் குளிக்க அனுமதிக்கப்படாததை சுட்டிக்காட்டி இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் கடந்த முறை இந்தியா வந்தபோது ஆடுகளம் கிரிக்கெட் விளையாட தகுதி இல்லாத ஆடுகளம் என்றும் எல்கர் விமர்சித்து இருந்ததையும் குறிப்பிடும் இந்திய ரசிகர்கள் அவரை வசை பாடி வருகின்றனர்.

Advertisement