தனது ஹோம் கிரவுண்டில் சதமடித்த தென்னாப்பிரிக்க வீரருக்கு ரசிகர்கள் கொடுத்த மரியாதை – விவரம் இதோ

Dean-Elgar
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியன் நகரில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்தியா அணியானது கே.எல் ராகுலின் அபாரமான சதம் காரணமாக முதல் இன்னிங்சில் 245 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணியானது இரண்டாம் நாள் தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்திய அணியை விட 51 ரன்கள் மட்டுமே பின் தங்கிய நிலையில் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி நிச்சயம் இந்திய அணியை விட முன்னிலை பெற்று வலுவான நிலைக்கு செல்லும் என்பது உறுதி.

இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டீன் எல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14-வது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்த போட்டியில் இதுவரை 168 பந்துகளை சந்தித்து இருக்கும் அவர் 21 பவுண்டர்களுடன் 115 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சதம் அவரது 14-வது சதமாக இருந்தாலும் தனது சொந்த ஊரில் நடைபெறும் போட்டியில் அவர் அடித்த முதல் சதமாகவும் இது பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : சவால் கொடுக்கும் எல்கர்.. 93 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை.. விராட் கோலியின் மேஜிக்கால் உடைத்த பும்ரா.. நடந்தது என்ன?

இந்த சதத்தினை ரசித்த தென்னாப்பிரிக்க ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு சல்யூட் அடித்து மரியாதை அளித்தனர். அதோடு தற்போது 36 வயதாகும் டீன் எல்கருக்கு இதுவே கடைசி டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement