இவர் இப்படி ஆடுனா நாங்க என்ன பண்ண முடியும் ? – டெல்லி அணியில் நீடிக்கும் குழப்பம்

Iyer
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீதமுள்ள 31 போட்டிகள் வரும் செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

IPL

- Advertisement -

அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையையும் சமீபத்தில் வெளியாகியது. இதனை தொடர்ந்து தற்போது இந்த ஐபிஎல் தொடர்களில் பங்கேற்கும் அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து வருகின்றன. இந்நிலையில் இந்தத் தொடரில் சில வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறாமல் போகவும், ஆரம்பத்தில் பார்மில் இருந்த வீரர்கள் இப்போது பார்ம் அவுட்டாகவும் வாய்ப்புள்ளது.

இதுபோன்ற சில காரணங்கள் பல அணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் தற்போது டெல்லி அணியின் கேப்டனாக திகழ்ந்து வரும் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் சிறப்பான பார்மில் இருந்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் அவரது ஆட்டம் மிகவும் சொதப்பலாக இருக்கிறது. இதன் காரணமாக அவர் டெல்லி அணியின் கேப்டனாக நீடிப்பாரா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

pant 4

ஏனெனில் ஐபிஎல் துவக்க போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த பண்ட் இந்த இங்கிலாந்து தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்ற மேலும் 4 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதன் காரணமாக அவருக்கு பதிலாக சஹா மாற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நேரத்தில் ரிஷப் பண்ட் அணியின் கேப்டனாக நீடிப்பாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் நடப்பாண்டின் தர வரிசைப்படி டெல்லி அணி முதல் இடத்தில் உள்ளதால் அவர் கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement