முக்கிய வீரரின்றி களமிறங்கிய டெல்லி அணி. பெங்களூரு அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயிப்பு – சாதிக்குமா ஆர்.சி.பி. ?

DC
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 19 ஆவது லீக் போட்டி தற்போது துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. துபாய் மைதானத்தில் துவங்கியுள்ள இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளையாடி வருகிறது.

Stoinis-2

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்நிஸ் 53 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

ப்ரித்வி ஷா 42 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்கள் குவித்தனர். அடுத்து தற்போது 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி பெங்களூர் அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு மிகப்பெரிய வீரரை இழந்து டெல்லி அணி விளையாடி வருகிறது.

Mishra

அதாவது கடந்த போட்டியின் போது கேட்ச் பிடிக்க முற்படுகையில் அடிப்பட்டு வலியால் துடித்த அமித் மிஸ்ரா இந்த போட்டியில் விளையாடவில்லை. மேலும் அவர் இனி வரும் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் தான் என்றும் இந்த தொடரில் இருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement