இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அக்சர் படேல் தலைமையில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளை பெற்று 15 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. ஆரம்பகட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றதால் டெல்லி அணி எளிதில் ப்ளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பினை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அக்சர் படேல் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு :
ஆனால் இரண்டாம் பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது அந்த அணியின் நிர்வாகத்தின் மத்தயில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடரில் அந்த அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் நிர்வாகமானது அக்சர் படேலை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அக்சர் படேல் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் அவர் தொடர்ந்து தங்களது அணியில் முக்கிய வீரராக பயணிப்பார் என்றும் டெல்லி அணியின் நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிகிறது. அதோடு இப்படி அக்சர் பட்டேல் கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக மூன்று வீரர்களுக்கு கேப்டன் பதவிக்கான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
கே.எல் ராகுல், டூப்ளிசிஸ், ஸ்டெப்ஸ் ஆகிய மூவர்தான் அந்த கேப்டன் போட்டியில் இருப்பார்கள் என்று தெரிகிறது. இதில் ஏற்கனவே கே.எல் ராகுல் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டதால் அவர் மீண்டும் புதிய கேப்டனாக வர வாய்ப்பு இல்லை. அதேபோன்று தற்போது டூப்ளிசிஸ் தனதுகரியரின் இறுதி கட்டத்தில் இருப்பதால் அவருக்கும் கேப்டன் பதவி வழங்குவதில் பெரியளவு சிக்கல் இருக்கிறது.
இதையும் படிங்க : தோனி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்து 3 ஆவது இந்திய கேப்டனாக சூரியகுமார் யாதவ் – அடையவுள்ள பெருமை
ஆனால் தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டெப்ஸ் மிகவும் இளம் வயது வீரர் என்பது மட்டுமின்றி அவர் நீண்ட எதிர்காலத்தை கொண்டவர் என்பதனால் அந்த அணியின் நிர்வாகம் அவரை நம்பி கேப்டன் பொறுப்பை வழங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



