எங்களயா இந்தியன் டீம்ல சேக்க மாட்றீங்க. அடித்து நொறுக்கிய 2 சீனியர்கள் வீரர் – டெல்லி மாஸ் வெற்றி

Iyer
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 33-ஆவது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக அப்துல் சமாத் 28 ரன்களும், ரஷீத் கான் 22 ரன்களையும் குவித்தனர்.

dcvssrh

- Advertisement -

அதன் பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடி இறுதியில் 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 139 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியின் இரண்டு சீனியர் வீரர்களான ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவானுக்கு டி20 உலக கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோன்று ஷ்ரேயாஸ் ஐயரும் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் நேரடியாக இந்திய அணியின் வாய்ப்பு இவருக்கும் மறுக்கப்பட்டது.

dhawan

இந்த கோபத்தை அப்படியே வெளிப்படுத்திய இவர்கள் இருவரும் சன்ரைசர்ஸ் அணியை வெளுத்து வாங்கினார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் 37 பந்துகளை சந்தித்த தவான் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 42 ரன்கள் அடித்து அசத்தினார். அதே போன்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி 2 சிக்சருடன் 47 ரன்கள் அடித்து அசத்தினார்.

iyer 1

தவான் மற்றும் ஐயர் இருவருமே ரஷீத் கான் ஓவரில் தலா ஒரு சிக்சரை விளாசி தரமான பேட்ஸ்மேன்கள் என்பதை அழுத்தமாக நிரூபித்தனர். இறுதியில் கேப்டன் ரிஷப் பண்ட்டும் 21 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 35 ரன்கள் விளாச டெல்லி அணி சன்ரைஸ் அணியை எளிதாக வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement