இதுதான் டெல்லி அணியோட உண்மையான ஸ்ட்ரென்த். சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அபாரம் – எப்படி நடந்தது?

DC vs SRH Kane Williamson
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 5-ஆம் தேதி நடைபெற்ற 50-ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் சந்தித்தன. ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்ததை அடுத்து களமிறங்கிய டெல்லிக்கு பிரிதிவி ஷா இல்லாத நிலையில் டேவிட் வார்னருடன் களமிறங்கிய மந்தீப் சிங் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 10 ரன்களில் நடையை கட்டினார். அதனால் 37/2 என ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்த டெல்லிக்கு அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்சருடன் 26 (16) ரன்கள் எடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

David Warner Rovman Powell

- Advertisement -

அதனால் 9 ஓவர்களில் 85/3 என என சரிந்த டெல்லிக்கு அடுத்ததாக களமிறங்கிய இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவல் உடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் நிதானமாகவும் அதிரடியாகவும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் வார்னர் அரைசதம் கடந்து பேட்டிங் செய்ய அவருக்கு உறுதுணையாக போவல் அதிரடியாக பவுண்டரிகளை பறக்கவிட தொடங்கினார்.

வார்னரின் பதிலடி:
10 ஓவர்களுக்கு பின் ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்த இந்த ஜோடியில் 3 பவுண்டரி 6 சிக்சர்கள் வெறும் 35 பந்துகளில் ரோவ்மன் போவெல் 67* ரன்கள் எடுக்க மறுபுறம் நங்கூரமாக நின்ற டேவிட் வார்னர் 12 பவுண்டரி 3 சிக்சருடன் 92* (58) ரன்களை தெறிக்க விட்டதால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழந்த டெல்லி 207 என்ற பெரிய ஸ்கோரை எடுத்தது. கடந்த 2015 முதல் ஆயிரக்கணக்கில் ரன்கள், கேப்டனாக 2016இல் கோப்பையை வாங்கிக் கொடுத்த போதிலும் 2021இல் முதல் முறையாக ரன்கள் அடிக்க தவறியதன் கழற்றி விட்டு அவமானப்படுத்திய தனது முன்னாள் அணியான ஹைதராபாத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே 92* ரன்கள் விளாசிய வார்னர் அந்த அணிக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

David Warner vs SRH

அதை தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா 7 (6) கேன் வில்லியம்சன் 4 (11) பவர்பிளே ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். போதாகுறைக்கு அடுத்து வந்த ராகுல் திரிபாதியும் 22 (18) ரன்களில் அவுட்டானதால் 37/3 என ஆரம்பத்திலேயே ஹைதராபாத் திணறியது.அப்போது ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் – நிக்கோலஸ் பூரன் பொறுப்பான 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது 4 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக பேட்டிங் செய்த ஐடன் மார்க்ரம் 42 (25) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

ஆனால் அடுத்து வந்த ஷஷாங்க் சிங் 10 (6) சீன் அபோட் 7 (4) போன்ற வீரர்கள் கைகொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் மறுபுறம் தனி ஒருவனை போல  பவுண்டரி 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 62 (34) ரன்களை எடுத்த போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 186/8 ரன்களை மட்டுமே எடுத்த ஹைதராபாத் 21 ரன்கள் வித்யாசத்தில் தோற்றது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் கலீல் அஹமது 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

Kane Williamson Abishek Sharma SRH

டெல்லியின் பலம்:
முன்னதாக இதற்கு முந்தைய போட்டிகளில் ரிஷப் பண்ட் மற்றும் ரோவ்மன் போவல் போன்ற அதிரடி வீரர்களை பாதுகாப்பாக வைத்து கடைசி ஓவர்களில் களமிறக்கி அதிரடியாக ரன்களை சேர்க்கலாம் என்ற நோக்கத்தில் லலித் யாதவ் போன்றவை இளம் வீரர்களுக்கு பின் அவர்களை டெல்லி அணி நிர்வாகம் களமிறக்கியது. ஆனால் அதில் துளியளவும் பயனடையாத டெல்லி தோல்விகளை சந்தித்ததால் இன்றைய போட்டி வாழ்வா சாவா என்ற போட்டியாக மாறியது.

அதனால் “வேறு வழியின்றி இனி ஆனது ஆகட்டும் முழு பலத்தை காட்டியே தீரவேண்டும்” என்ற இக்கட்டான நிலையால் இன்றைய போட்டியில் 10 ஓவர்களுக்கு முன்பே ரிஷப் பண்ட் மற்றும் ரோவ்மன் போவலை களமிறக்கியது கைமேல் பலனளித்தது. குறிப்பாக கடந்த போட்டிகளில் 6, 7-வது இடங்களில் களமிறங்கிய ரோமன் போவல் இம்முறை 5-ஆவது இடத்தில் களமிறங்கி ஹைதராபாத்தை சக்கை போடு போட்டு முக்கியமான 67* ரன்களை சேர்க்க கூடவே டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடியதால் டெல்லி 207 என்ற மிகப்பெரிய ரன்களை எட்டியது.

Dc

அவ்வளவு பெரிய ஸ்கோர் வந்த தைரியத்தில் டெல்லி பவுலர்களும் சிறப்பாக பந்துவீசி வெற்றியை உறுதிசெய்தனர். இதனால் 10 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்த புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறி ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. மறுபுறம் பந்துவீச்சில் கோட்டைவிட்டு பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத் 5-வது தோல்வியை பதிவு செய்து 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

Advertisement