DC vs RCB : முக்கிய நேரத்தில் அந்நியனாக மாறிய டெல்லி – ஆர்சிபி’யை அடித்து துவைத்து புள்ளி பட்டியலில் மாஸ் முன்னேற்றம்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 50வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் 11 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போது 5 பவுண்டரை 1 சிக்சருடன் 45 (32) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றிய போதிலும் அடுத்ததாக களமிறங்கிய மகிபால் லோமரர் உடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி அதிரடியை துவக்காமலேயே சற்று மெதுவாக விளையாடி 5 பவுண்டரியுடன் 55 (46) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட மகிபால் லோம்ரர் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 54* (29) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 181/4 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

டெல்லி சார்பில் அதிகபட்சமாக மிச்சல் மார்ஷ் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 182 ரன்களை துரத்திய டெல்லிக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய கேப்டன் டேவிட் வார்னர் 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த போதிலும் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 22 (14)  ரன்களில் அவுட்டானார். அவரை விட மறுபுறம் மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட் பெங்களூரு பவுலர்களுக்கு கருணை காட்டாமல் சரவெடியாக விளையாடியனார்.

அவருடன் எதிர்ப்புறம் வந்த மிட்சேல் மார்ஷ் தனது பங்கிற்கு 2வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் டெல்லியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்து 3 பவுண்டரி 1 சிக்சருடன் 26 (17) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய ரிலீ ரோசவ் இந்த போட்டியில் சுமாராக பந்து வீசிய பெங்களூரு பவுலர்களை வெளுத்து வாங்கியதைப் போல மறுபுறம் தொடர்ந்து அதிரடி காட்டிய பில் சால்ட் அரை சதமடித்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்து 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 87 (45) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் அக்சர் பட்டேல் 8* (3) ரன்களும் ரிலீ ரோசவ் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 35* (22) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 16.4 ஓவரிலேயே 187/3 ரன்கள் எடுத்த டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி அரை சதமடித்த விராட் கோலி சற்று மெதுவாக விளையாடியதும் கடைசி நேரத்தில் பினிஷிங் செய்யாமல் தினேஷ் கார்த்திக் மீண்டும் சொதப்பியதும் பெங்களூரு 200 ரன்கள் அடித்து வெற்றிக்கான எக்ஸ்ட்ரா ரன்களை எடுக்கும் வாய்ப்பை தகர்த்தது.

அதை விட பந்து வீச்சில் வழக்கம் போல ஆரம்பத்திலிருந்தே ரன்களை வாரி வழங்கிய பெங்களூரு பவுலர்கள் வெற்றியை தாரை வர்த்தனர். குறிப்பாக ஹசரங்காவை தவிர்த்து சிராஜ், ஹர்ஷல் படேல் உள்ளிட்ட அனைவரும் 9க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினர். அதை பயன்படுத்தி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய வெறியுடன் விளையாடிய டெல்லி பேட்ஸ்மேன்கள் இந்த சீசனிலேயே முதல் முறையாக அதிரடியாக செயல்பட்டு அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தனர்.

குறிப்பாக இந்த சீசனில் முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை பதிவு செய்து முதல் வாரத்திலிருந்தே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்த டெல்லி தற்போது ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளி 8 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. மறுபுறம் சுமாராக செயல்பட்டு தோற்ற பெங்களூரு தொடர்ந்து 5வது இடத்தில் தடுமாறுகிறது.

Advertisement