- Advertisement -
இந்திய கிரிக்கெட்

9 ரன்ஸ்.. 19 விக்கெட்ஸ்.. விரித்த வலையில் பாகிஸ்தானை விழ வைத்து மாஸ் காட்டிய வெ.இ.. 38 வருட சாதனை ஆட்டம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி ஜனவரி 25ஆம் தேதி முல்தான் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் சுமாராக விளையாடி 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. சொல்லப்போனால் கேப்டன் ப்ரத்வெய்ட் 9, அமீர் ஜங்கோ 0, காவெம் ஹோட்ஜ் 21 என அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் செவிலியன் திரும்பினார்கள். அதனால் 38-7 என திணறிய வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அசத்தும் வெ.இ:

அப்போது ஒன்பதாவது இடத்தில் களமிறங்கி அபாரமாக விளையாடிய குடகேஷ் மோட்டி 55 ரன்கள் குவித்து கை கொடுத்தார். அவருடன் 10, 11 ஆகிய இடங்களில் விளையாடிய கிமர் கோச் 25, ஜோமேல் வேரிக்கன் 36 ரன்கள் எடுத்து கை கொடுத்தார்கள். அதனால் வெஸ்ட் இண்டீஸ் தப்பிய நிலையில் பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக நோமன் அலி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக பாகிஸ்தானுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த முதல் ஸ்பின்னராக சாதனை படைத்த நோமன் அலி வெஸ்ட் இண்டீஸ் அணியை சுருட்ட உதவினார். அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தானை உங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் மடக்கி பிடித்தார்கள். அதில் அசத்த முடியாத சான் மசூத் 15, பாபர் அசாம் 1, கம்ரான் குலாம் 16, சல்மான் ஆகா 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

9 ரன்கள் முன்னிலை:

மிடில் ஆர்டரில் முகமது ரிஸ்வான் 49, சவுத் ஷாக்கில் 32 ரன்கள் எடுத்தும் பாகிஸ்தானை 154 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் செய்தது. அந்த அணிக்கு குடகேஷ் மோட்டி 3, கெமர் ரோச், ஜோமேல் வேரிக்கன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் 9 ரன்கள் முன்னிலையில் பெற்றுள்ளது.

இத்தொடரில் பவுலிங் செய்வதற்கு சாதகமாக மாற்றிய பாகிஸ்தான் வெற்றியும் கண்டு இந்த தொடரின் முதல் போட்டியிலும் வென்றது. ஆனால் இந்தத் போட்டியில் பாகிஸ்தான் விரித்த வலையில் அந்தணியை விலை வைத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் போராடினால் வெல்லலாம் என்ற நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை டி20யில் டாஸ் வென்ற இந்தியா.. தமிழக வீரருக்கு எக்ஸ்ட்ரா வாய்ப்பு.. 2 மாற்றங்களுடன் பிளேயிங் லெவன்

இப்போட்டியின் முதல் நாளில் ரன் அவுட் இல்லாமல் 19 விக்கெட்டுகள் விழுந்தன. அதன் வாயிலாக ஆக்கிய கண்டத்தில் ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக விக்கெட்டுகள் விழுந்த போட்டியாக இந்தப் போட்டி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 1987 இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெல்லி டெஸ்ட் போட்டியில் 18 விக்கெட்டுகள் விழுந்ததே முந்தைய சாதனை.

- Advertisement -